• Jan 18 2025

அந்த மனசுதான் கடவுள்.. விஜய் செய்ததெல்லாம் ஒன்னுமே இல்லை.. தர்ஷா குப்தாவின் வைரல் வீடியோ..!

Sivalingam / 7 months ago

Advertisement

Listen News!

நேற்று உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தளபதி விஜய்யின் தமிழக வெற்றி கழகத் தொண்டர்கள் தமிழகம் முழுவதும் அன்னதானம் வழங்கினார்கள் என்பதும் ஏராளமானவர்களின் பசியை போக்கினார்கள் என்பதையும் பார்த்தோம். முன்னதாக மே 28ஆம் தேதி உலக பட்டினி தினத்தில் தனது கட்சி தொண்டர்கள் அன்னதானம் வழங்க வேண்டும் என்று விஜய் அறிக்கை வெளியிட்டிருந்தார் என்பதும் அந்த அறிக்கையின் அடிப்படையில் நேற்று தமிழகத்தின் பல பகுதிகளில் அன்னதானம் செய்ததை பார்க்க முடிந்தது.

இந்த நிலையில் உலக பட்டினி தினத்தை முன்னிட்டு பல திரையுலக பிரபலங்களும் நேற்று சத்தமே இல்லாமல் பலருக்கு உணவை வழங்கியுள்ள புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

அந்த வகையில் குக் வித் கோமாளி போட்டியாளர் மற்றும் நடிகை தர்ஷா குப்தா சென்னையில் உள்ள முக்கிய பகுதியில் நேற்று ஏழை எளியவர்களுக்கு உணவு மற்றும் தண்ணீர் பாட்டில் வழங்கிய வீடியோ அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் ரசிகர்கள் அவருக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

கோடிக்கணக்கில் பணம் வைத்திருக்கும் விஜய் அரசியல் கட்சி ஆரம்பித்ததை அடுத்தே உலக பட்டினி தினத்தில் அன்னதானம் செய்து வருகிறார் என்றும் ஆனால் ஒவ்வொரு ஆண்டும் பட்டினி தினத்தில் மட்டுமின்றி தனது பிறந்த நாளிலும் தர்ஷா குப்தா தன்னால் முடிந்த உதவியை செய்து வருகிறார் என்பதும் அதேபோல் நேற்று அன்னதானம் செய்துள்ளார் என்றும் ரசிகர்கள் பதிவு செய்து வருகின்றனர்.

அதுமட்டுமின்றி தர்ஷா குப்தா தனது கைப்படவே ஏழை எளியவர்களுக்கு உணவு மற்றும் தண்ணீர் பாட்டில் வழங்கினார் என்றும் அந்த மனசு தான் கடவுள் என்றும் அவர் கிளாமராக புகைப்பட போட்டோஷூட் எடுத்தாலும் அவரது உள்ளம் தூய்மையானது என்றும் கமெண்ட்கள் பதிவாகி வருகிறது.



Advertisement

Advertisement