• Jan 19 2025

உயிருக்கு போராடிய ராமமூர்த்தி.. கோபிக்கு வந்த பிளாக்மெயில்! உடைந்து போன பாக்கியா

Aathira / 7 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசொட்டில், ஜெனி குழந்தையை தூங்க வைத்துவிட்டு தானும் தூங்க,  ராமமூர்த்தியும் தூங்கி விடுகிறார். சிறிது நேரத்தில்  பசிக்குது என்று ராமமூர்த்தி எழும்பி, சாப்பாடுக்கு முன் எந்த மாத்திரை போடுவது என்று தெரியாமல் ஒரு நாள் தானே என்று மாத்திரை போடாமல் சாப்பிடுகின்றார்.

மறுபக்கம் பாக்கியா மளிகை சாமான்களை எழுதி  கொடுத்துவிட்டு வீட்டில் ஜெனி என்ன பண்ணுகிறாரோ தெரியல மாமாவுக்கு சாப்பாடு கொடுத்தாலோ தெரியல என்று கிளம்பி வருகிறார்.

இதை தொடர்ந்து ஜெனியும் தூக்கத்திலிருந்து எழுந்து ரொம்ப நேரம் தூங்கிட்டேன். தாத்தா சாப்பிட்டாரா என்று தெரியல என கீழே வந்து பார்க்க, சாப்பிட்டு இருக்கின்றார் என தெரிந்து கொள்கிறார்.

அதன் பிறகு பாக்கியா வந்து மாமாவுக்கு சாப்பாடு கொடுத்தியா மாதிரி கொடுத்தியா என்று கேட்க, மாமா சாப்பிட்டு இருக்காரு ஆனா மாத்திரை போட்டாரா என தெரியல. பாப்பா கத்திக்கொண்டே இருந்தா. அவள தூங்க வச்சுட்டு நானும் அப்படியே தூங்கிட்டேன் என்று சொன்னதும் பாக்கியா ரூமுக்கு வந்து பார்த்தபோது அவர் மாத்திரை போடவில்லை என்பதை தெரிந்து கொள்கிறார் .


அதன் பிறகு ராமமூர்த்தியை எழுப்ப முயற்சிக்க அவர் மயக்கத்தில் இருந்து எழுந்து கொள்ளாமல் இருக்கின்றார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்து எழிலுக்கு போனை போட்டு ஆட்டோவைக் கூட்டி வந்து ராமமூர்த்தியை  ஹாஸ்பிடலுக்கு அழைத்துச் செல்கின்றார். இதனால் எல்லாம் என்னால தான் என ஜெனி அழுது புலம்புகிறார். ராமமூர்த்தி ட்ரீட்மென்ட் எடுத்து வீட்டுக்கு வர, ஜெனி அவரிடம் மன்னிப்பு கேட்கின்றார். ஆனாலும் அவர் நானாவது பாக்கியா, அமிர்தாவுக்கு போன் பண்ணி கேட்டு இருக்கணும் என்று சொல்கிறார்.

மறுபக்கம் கமலா ராதிகாவுக்கு காபி போட்டு கொடுக்க அத்தைக்கு கொடுத்தியா என்று அம்மாவிடம் கேட்கிறார் ராதிகா. அதற்கு அவர் இல்லை எதற்கு போட்டு கொடுக்கணும் என்று கேட்க, சரி நானே போட்டு கொடுக்கிறேன் என ராதிகா எழும்ப, நீ எழும்ப வேண்டாம் நானே போட்டு கொடுக்கிறேன் உட்காரு என கமலா ஈஸ்வரிக்கு காபி போட்டு கொடுக்கிறார்.

அதை குடித்துப் பார்த்த ஈ ஸ்வரி நல்லாவே இல்லை என்று சொல்கிறார். அதற்கு கமலா வேணுமென்றே கப்பை தள்ளிவிட்டு, எதற்கு கீழே போட்டு உடைச்சிங்க என்று ஈஸ்வரி மீது பழி போடுகிறார். அங்கு வந்த ராதிகாவும் ஈஸ்வரியை திட்டுகிறார். உடனே கோபிக்கு போனை போட்டு கிளம்பி இங்க வா என்று சொல்ல, கோபி கிச்சனில் வேலை இருக்கு என்று சொல்கிறார்.

அதற்கு சரி அப்போ உனக்கு அம்மா முக்கியம் இல்லையா என்று பிளாக்மெயில் செய்ய, இதோ வாரேன் என்று கோபி வருகிறார்.இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement