• Jan 19 2025

முதலிரவு அறையில் பத்திகிச்சு.. ராஜி-கதிர் ஒண்ணு சேர்ந்துடுவாங்களா?

Sivalingam / 7 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியல் விறுவிறுப்பான கட்டத்தில் சென்று கொண்டிருக்கும் நிலையில், இன்றைய எபிசோடில் புதுமண தம்பதிகளான சரவணன் தங்கமயிலுக்கு பால் பழம் கொடுக்கும் சடங்குகள் நடக்கின்றது. அதன் பிறகு முதலிரவு அறையை தயார் செய்ய செந்தில், கதிர் மற்றும் சித்தப்பா ஆகிய மூவரும் செல்ல முதலிரவு அறையை மூவரும் சேர்ந்து வித்தியாசமான முறையில் தயார் செய்கிறார்கள்.

அப்போது செந்தில், கதிர் ஆகிய இருவரும் சித்தப்பாவின் திருமணம் குறித்து கேலி செய்து பேசுவதும் தனக்கு வயதாகி விட்ட நிலையில் இனி யார் எனக்கு பெண் கொடுப்பார்கள் என சித்தப்பா புலம்புவதுமான காட்சிகள் உள்ளன. அப்போது செந்தில் , கதிர் இருவரும் கவலைப்படாதீர்கள், எங்க அப்பா உங்களுக்கு கண்டிப்பாக ஒரு பெண்ணை பார்த்து பிரமாண்டமாக திருமணம் செய்து வைப்பார், உங்களுக்காக தனி அறையும் கொடுப்பார், அல்லது தனிக்குடித்தனம் வைப்பார் என்று கூறி ஆறுதல்  சொல்கிறார்கள்.

இந்த நிலையில் தங்கமயில் - ராஜி பேசி கொண்டிருக்கும்போது ‘நீங்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டீர்களா என்றும் தங்கமயில் கேட்க, தர்ம சங்கடப்படும் ராஜி அந்த இடத்தை விட்டு நைசாக நழுவுகிறார். அப்போது பாக்கியம் போன் செய்து ’மாப்பிள்ளையை கைக்குள் போட்டுக் கொள், மாமனார் மாமியாரை கைக்குள் போட்டுக் கொள், நீ இல்லாமல் அங்கு எதுவும் நடக்க கூடாது, நீ என்ன சொன்னாலும் எல்லோரும் தலையாட்ட வேண்டும்’ என்று தவறான அறிவுரைகளை கூற, தங்கமயிலும் சரி என்று கேட்டுக்கொள்கிறார்.

இந்த நிலையில் முதலிரவு ஏற்பாடு செய்த அறையில் கதிர் மட்டும் வேலைகளை செய்து கொண்டிருக்கும் நிலையில் எதிர்பாராமல் அங்கு ராஜி வருகிறார். அப்போது இருவருக்கும் இடையே உரசல் ஏற்பட்டு ரொமான்ஸ் வருவதோடு இருவருக்கும் மனதுக்குள் பத்திகிச்சு போல தெரிவதுடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வருகிறது.

Advertisement

Advertisement