• Jan 19 2025

விமர்சனத்துக்கு மத்தியில் தனுஷ் திருமணம்... விருந்தினர் வருகையால் குஷியில் நெப்போலியன்!

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

நடிகர் நெப்போலியன் தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க நடிகர்களில் ஒருவராக இருந்தவர். தமிழ் மட்டுமின்றி மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்திருக்கிறார். சினிமாவில் பிஸியாக இருந்த அவர் திடீரென அரசியலுக்குள் நுழைந்து எம்.பியாகவும் மாறினார். இப்படி சினிமா, அரசியல் என பம்பரமாய் சுழன்றுகொண்டிருந்தவருக்கு மகன் தனுஷுக்கு வந்த தசை சிதைவு நோய் அவரை மாற்றியது. 


இந்தியாவில் வைத்து ஏகப்பட்ட சிகிச்சைகளை மகனுக்கு கொடுத்தார் நெப்போலியன். பின்னர் அமெரிக்காவில் செட்டிலாகி விட்டார். முதலில் இந்தியாவில் சிகிச்சை எடுத்துக்கொண்ட அவர் பிறகு அமெரிக்காவுக்கு சென்றார். மகனின் ஆசைக்காக நெப்போலியன் அங்கேயே செட்டிலும் ஆகிவிட்டார்.மேலும் ஒரு ஐடி கம்பெனியையும் நடத்திவருகிறார். விரைவில் தனுஷின் திருமணம் ஜப்பானில் நடைபெறவிருக்கிறது. 


பல விமர்சனங்கள், கருத்துக்கள் என பலவாறு வந்த போதும் அது எல்லாம் எனக்கு மோட்டிவேஷனாக இருக்கிறது என்று அவருடைய மகன் அதனை போசிட்டிவாக எடுத்து கொண்டார்.  தனுஷின் திருமணம் மிக விரைவில் நடக்கவிருக்கிறது. அதற்கான ஏற்பாடுகளில் நெப்போலியனும் அவரது குடும்பத்தினரும் ஈடுபட்டிருக்கிறார்கள். நிச்சயமாக தனுஷின் திருமண வாழ்க்கை சிறப்பாக அமையும் என்றும் பலர் வாழ்த்து தெரிவித்துவருகிறார்கள். 

d_i_a


இந்தச் சூழலில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ பகிர்ந்திருக்கும் நெப்போலியன், ''அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள். எனது மகன் தனுஷின் திருமணத்துக்காக உறவினர்கள், விருந்தினர்கள் வர ஆரம்பித்துவிட்டார்கள். அதனால் அவர்களை வரவேற்பதற்கு ஜப்பான் விமான நிலையம் சென்றுகொண்டிருக்கிறேன். இருந்தாலும் சாலையோரம் காரை நிறுத்திவிட்டு இந்த வீடியோவை பதிவிடுகிறேன்'' என்று மகிழ்ச்சியோடு குறிப்பிட்டிருக்கிறார். 


Advertisement

Advertisement