• Dec 07 2024

பாலிவூட் பாட்ஷாவின் ஒரு நாள் சம்பளம் இத்தனை கோடியா..? பலரும் வியக்கும் உண்மை தகவல்

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

பாலிவுட்டில் பிரபல நடிகராக திகழ்ந்து வருபவர் தான் நடிகர் ஷாருக்கான். இவருக்கு 59 வயதான போதிலும் இன்றும் சினிமாவில் கொடி கட்டி பறந்து வருகின்றார். இவர் படங்களில் மட்டும் இல்லாமல் விளம்பரங்கள், திரைப்பட தயாரிப்புகள், இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்பதன் மூலமும் சம்பாதிக்கும் ஒருவராக காணப்படுகின்றார்.

ஷாருக்கானின் முதல் சம்பளம் வரும் 50 ரூபாய் என்று அவர் வழங்கிய பேட்டி ஒன்றில் கூறியிருப்பார். இப்பொது பலரும் வியக்கும் வகையில் பல வழிகளில் வருமானத்தை ஈட்டி வருகிறார் ஷாருக்கான்.

அதன்படி, ஒரு நடிகராக படங்களில் நடிப்பதற்கு சுமார் 150 தொடக்கம் 250 கோடி வரை சம்பளமாக பெறுகின்றார். மேலும் விளம்பரங்களில் நடிப்பதற்காக 5 தொடக்கம் 10 கோடி ரூபாய் வசூலித்து வருகின்றாராம்.

d_i_a

தனியார் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு நிகழ்ச்சிகளை நடத்துவதற்காகவே இரண்டு தொடக்கம்  மூன்று கோடிகளை சம்பளமாக பெறுகின்றார். மேலும் பேச்செக் டாட் தகவல்களின்படி ஷாருக்கான் ஆண்டுக்கு 800 கோடி ரூபாயும், மாதத்திற்கு 66 கோடி ரூபாயும், வாரத்திற்கு 15 கோடி என நாள் ஒன்றுக்கு 3 கோடி ரூபாய் வரை சம்பாதிக்கின்றாராம்.


அதன்படி ஷாருக்கானின் ஒரு மணி நேர சம்பளம் சுமார் 21,000 க்கு மேல் எனக் கூறப்படுகின்றது. இவரின் ஒரு மணி நேர வருமானம் ஒரு சாதாரண ஊழியரின் மாதச் சம்பளத்தை விட அதிகம் என கூறப்படுகின்றது. இவர் தனது தயாரிப்பு நிறுவனம் மூலமும் வருமானம் பெற்று வருகின்றமை குறிப்பிட்டத்தக்கது. 

Advertisement

Advertisement