• Sep 14 2024

தனுஷ் கெஞ்சி கேட்டும் முடியாது என சொன்ன சுதா கொங்கரா.. ‘புறநானூறு’ பின்னணி என்ன?

Sivalingam / 1 month ago

Advertisement

Listen News!

சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாக இருக்கும் அடுத்த படத்தில் நடிக்க தனக்கு வாய்ப்பளிக்கும் படி தனுஷ் கெஞ்சி கேட்டதாகவும் ஆனால் அவரது கோரிக்கையை ஏற்காமல் சிவகார்த்திகேயனை ’புறநானூறு’ திரைப்படத்தில் சுதா கொங்கரா ஒப்பந்தம் செய்து விட்டதாகவும் வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி விட்டது.

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாக இருந்த ’புறநானூரு’ திரைப்படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கிய நிலையில் திடீரென சூர்யா இந்த படத்தில் இருந்து விலகியதாக அறிவித்தார். அதுமட்டுமின்றி அவர் செலவழித்து தொகையும் வேண்டாம் என்று சொல்லிவிட்டதாகவும் இந்த படத்தை யாரை வேண்டுமானாலும் வைத்து சுதா கொங்கரா இயக்கிக் கொள்ளலாம் என்று என்ஒசி சான்றிதழ் கொடுத்து விட்டதாகவும் செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் தான் சூர்யா நடிக்க இருந்த கேரக்டரில் நடிக்க தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் ஆகிய இருவரையும் சுதா கொங்கரா அணுகியதாகவும், தனுஷுக்கு இந்த படத்தில் நடிக்க மிகவும் விருப்பம் இருந்தது என்றும் ஆனால் அதே நேரத்தில் ஏற்கனவே இரண்டு வருடத்திற்கு அவர் கமிட் ஆகி விட்டதால் எனக்காக இரண்டு வருடங்கள் வெயிட் பண்ணுங்கள் இந்த படத்தை நாம் கண்டிப்பாக செய்வோம், இந்த படத்தில் நான் நடிக்க மிகுந்த ஆவலோடு இருக்கிறேன்’ என்று சுதா கொங்கராவிடம் கூறியதாகவும் தெரிகிறது.



ஆனால் இரண்டு வருடங்கள் தன்னால் காத்திருக்க முடியாது என்று சொன்ன சுதா கொங்கரா இப்போது உடனே நடிப்பதாக இருந்தால் நடியுங்கள் அல்லது நான் வேறு நடிகரை பார்த்துக்கொள்கிறேன் என்றுதான் கூறியதாகவும் இதனை அடுத்து சிவகார்த்திகேயனை ஒப்பந்தம் செய்து விட்டதாக கூறப்படுகிறது.

சுதா கொங்கராவிடம் இந்த படத்தில் நடிக்கிறேன் என்று தனுஷ் தானே கீழே வந்து கெஞ்சி கேட்டும் அவர் சம்மதிக்கவில்லை என்ற தகவல் கோலிவுட் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை என்றாலும் சுதா கொங்கரா திரைப்படத்தில் நடிக்காமல் போனது தனுஷூக்கு  கடும் அதிருப்தி என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது.

Advertisement

Advertisement