• Jan 19 2025

ஈஸ்வரி கொடுத்த சரியான பதிலடி.. எழில் எடுத்த முடிவால் அதிர்ச்சியில் பாக்கியா

Aathira / 5 months ago

Advertisement

Listen News!

பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில், கோபி ஈஸ்வரியுடன் பேசுவதற்கு செல்ல, ராமமூர்த்தி அவரை திட்டி வெளியே போகுமாறு சொல்லுகிறார். ஆனாலும் தான் ஒரு வார்த்தை அம்மாவுடன் கதைத்து விட்டு போகின்றேன் என்று ஈஸ்வரிடம் செல்ல, ஈஸ்வரி நான் நேற்று பேசிய விஷயங்கள் எல்லாமே மனதில் இருந்து தான் சொன்னேன். நீ எனக்கு பிள்ளையே இல்லை. நீயா வெளிய போ இல்லாட்டி கழுத்தை பிடித்து வெளியே தள்ளுவேன் என்று கோபியை வெளியே அனுப்பி கதவை சாத்திக் கொள்கிறார். இதனால் கோபி மனம் உடைந்து வெளியே போகின்றார். 

மறுபக்கம் புரொடியூசருக்கு கதை சொல்லப்போன எழில் இன்னும்  வரவில்லை என பாக்கியா பேசிக் கொண்டிருக்க, எழிலும் வந்து விடுகின்றார். ஆனால் அவர் சோகமாக இருப்பதை பார்த்து என்ன நடந்தது என்று கேட்க, என் கூட படம் பண்ண மாட்டேன் என புரொடியூசர் சொன்னதாக எழில் சொல்லி கவலைப்படுகிறார்.

தனக்கு இரண்டு வாய்ப்பு தந்ததாகவும் அந்த டைமுக்கு கதை சொல்ல போகவில்லை என்ற காரணத்தினால் அவர் என்னை ரிஜெக்ட் செய்ததாகவும் சொல்லுகின்றார். ஆனாலும் பாக்கியா  அவருக்கு நம்பிக்கை கொடுத்து வேறு சான்ஸ் கிடைக்கும் என சொல்லுகிறார். எனினும் எழில் எனக்கு இனி நம்பிக்கை இல்லை. நான் சினிமாவை விட்டு வேறு வேளைக்கு போக போறேன் என சொல்லுகிறார்.


இதை தொடர்ந்து ராதிகா வீட்டில் மையூவுடன் இருக்க, மையூ  தூங்காமல் கோபிக்காக முழித்திருக்கின்றார். அந்த நேரத்தில் கோபியும் வந்து மையூவிடன் சாப்பிட்டியா? ஏன் இன்னும் தூங்கவில்லை என்று பேசுகிறார். உங்களுக்காகத்தான் பாத்துக்கிட்டு இருந்தன். நீங்க வர மாட்டீங்க என்று பயந்துட்டேன் என மையூ சொல்லுகிறார். 

ராதிகாவும், நீங்க நினைச்ச மாதிரி அம்மா வீட்டை விட்டு போயிட்டாங்க என்று சொல்லுகிறார். மேலும் கோபியுடன் மையூவை கோர்ட்டுக்கு அழைத்துச் சென்ற விஷயத்தை பற்றி பேச, அது நல்லது தானே. மையூ சொன்னப்படியாதால் அம்மாவை வெளியே விட்டாங்க என பதிலடி கொடுக்கிறார்.  இது  தான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement