விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் கடந்த ஜனவரி 19ஆம் தேதி உடன் பிரம்மாண்டமாக முடிவுக்கு வந்தது. இதில் முத்துக் குமரன் டைட்டில் வின்னர் ஆகவும், இரண்டாவது இடத்தில் சௌந்தர்யாவும், மூன்றாவதாக விஷாலும் வெற்றி பெற்றிருந்தார்கள்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டவர்தான் தர்ஷிகா. இவர் சீரியல் நடிகையாக காணப்படுகின்றார். விஜய் டிவியில் ஒளிபரப்பான பொன்னி சீரியலில் வில்லி கேரக்டரில் நடித்திருந்தார். அதன் பின்பு பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பற்றுவதற்காக அந்த சீரியல் இருந்து விலகினார்.
d_i_a
பிக்பாஸில் பங்கு பற்றிய தர்ஷிகா ஆரம்பத்தில் ஏனைய போட்டியாளருக்கு சபால் விடும் வகையில் மிகவும் வலிமையான போட்டியளராக காணப்பட்டார். தொடர்ந்து ஒரு சில வாரங்கள் கேப்டன்சியாகவும் இருந்தார். இவர் இறுதிவரை தாக்குப்பிடிப்பார் என பலராலும் எதிர்பார்க்கப்பட்டது.
எனினும் இடையில் பிக்பாஸ் வீட்டில் சக போட்டியாளரான விஷால் மீது காதல் கொண்டார். இதனால் பவித்ராவுக்கும் தர்ஷிகாவுக்கும் இடையில் மனக்கசப்பும் ஏற்பட்டது. ஆனால் ஒரு கட்டத்தில் விஷால் ஒரு பிளே பாய் என தெரிய வருகின்றது. அதன் பின்பு எதிர்பாராத விதமாக எலிமினேட் ஆகியிருந்தார் தர்ஷிகா.
இந்த நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின்னர் ஜிம்மில் கடுமையாக ஒர்க் அவுட் பண்ணும் வீடியோவை வெளியிட்டுள்ளார் தர்ஷிகா.
அதில் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் வலிமை பெறுவதற்காக ஜிம்மில் ஒர்க் அவுட் பண்ணுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். தற்போது அவர் மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப ரசிகர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Listen News!