• Jan 18 2025

கவுண்டிங்க் குறைஞ்சிட்டே வருது "பிக் பாங்" தான் போல ! ரசிகர்கள் தயாராகுங்கள்.

Thisnugan / 5 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நாயகன் விஜயின் 68 வது திரைப்படமான "கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் -கோட்" கடந்த ஆண்டு பெரும் எதிர்பார்ப்புக்கு  மத்தியில்  ஆரம்பமானது.ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரித்து வெளிவர இப் படத்தை இயக்குனர்  வெங்கட் பிரபு இயக்க படத்திற்கான இசையை யுவன் ஷங்கர் ராஜா வழங்கியுள்ளார்.

Vijay`s GOAT Squad

இரட்டை வேடங்களில் விஜய் நடிக்க பிரசாந்த் ,பிரபுதேவா என அடுத்த கட்ட பெரும் நட்சத்திர கூட்டணி அமைந்திருக்கும் இப் படத்தின்  மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் வெளியாகும் படத்தின் அப்டேட்கள் ரசிகர்களுக்கு கொண்டாட்டமாகவே அமைந்திருக்கிறது.

GOAT Plot Leaked? Vijay To Time Travel ...

வரும் செப்டம்பர் 5 இல் உலக அளவில் வெளியாகவிருக்கும் "கோட்" படத்தின் ரீலீஸ் டேட் அறிவிக்கப்பட்டதில் இருந்து டேய்ஸ் கவுண்டவுன் குறைந்து வருமாறு போஸ்டர்களை வடிவமைத்து வெளியிட்டுக்கொண்டிருக்கும் படக்குழு படத்தின் மீதான எதிர்பார்ப்பை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர்.இந்நிலையில் இயக்குனர் வெங்கட் பிரபு தனது எக்ஸ் தளத்தில் இன்னும் இருப்பது 44 நாட்கள் எனும் காப்ஷனுடன் இன்றைய நாளுக்கான போஸ்டரை வெளியிட்டுள்ளார்.


Advertisement

Advertisement