• Sep 04 2026

நானும் முதல்வராகலாமா? நடிகை தீபிகாவிற்கு திடீரென இப்படியொரு எண்ணம் வர என்ன காரணம்...

shali / 1 hour ago

Advertisement

Listen News!

சின்னத்திரையில் பிரபலமான நடிகையாக வலம் வரும் தீபிகா வெங்கடாச்சலம், தனது சமூக அக்கறை மற்றும் உதவும் குணம் குறித்து பகிர்ந்துள்ள தகவல் தற்போது கவனம் பெற்று வருகிறது. சிறு வயது முதலே மற்றவர்களுக்கு உதவும் பழக்கத்தை தனது தாய் தனக்கு கற்றுக் கொடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து பேசிய தீபிகா வெங்கடாச்சலம், “தற்போது ஒவ்வொரு மாதமும் ரூ.30 ஆயிரம் தேவைப்படுபவர்களுக்கு உதவி செய்து வருகிறேன். இந்த பழக்கம் எனக்கு சின்ன வயதிலிருந்தே இருக்கிறது. இதை என் அம்மா தான் எனக்கு சொல்லிக் கொடுத்தார். முதலில் ரூ.100 கொடுத்து உதவ ஆரம்பித்தேன். தற்போது என்னால் முடிந்த அளவுக்கு ரூ.1 லட்சம் வரையிலும் உதவி செய்திருக்கிறேன்....” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், தொடர்ந்து மக்களுக்கு உதவி செய்து வரும் நிலையில், “பரவாயில்லையே… மக்களுக்கு ரூ.1 லட்சம் எல்லாம் கொடுக்கிறோமே… முதல்வராகலாமா?” என்று கூட ஒரு கட்டத்தில் தான் நினைத்ததாக அவர் சுவாரஸ்யமாக குறிப்பிட்டுள்ளார்.

தீபிகாவின் இந்த பேச்சு, அவரது ரசிகர்கள் மத்தியில் பல்வேறு கருத்துகளை ஏற்படுத்தியுள்ளது. சினிமா மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் தங்களது சமூகப் பொறுப்பை வெளிப்படுத்தி வரும் நிலையில், தீபிகா தனது உதவும் மனப்பான்மை குறித்து வெளிப்படையாக பேசியிருப்பது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement

Advertisement