• Oct 14 2026

உயிர்–உலகத்துடன் நயன்தாரா செய்த குறும்புத்தனம்.. வைரலாகும் வீடியோ.!

shali / 1 month ago

Advertisement

Listen News!

நடிகை நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் இருவரும் தங்களது இரட்டை குழந்தைகளான உயிர் மற்றும் உலகத்துடன் செலவிடும் அழகான தருணங்கள் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. திரையுலகில் பிஸியாக இருந்தாலும், தங்களது குழந்தைகளுடன் நேரம் செலவிடுவதற்கு இருவரும் தொடர்ந்து முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர்.

நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதியினர் தங்களது குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருவது வழக்கம். அந்த வகையில், தற்போது குழந்தைகளுடன் இருவரும் மகிழ்ச்சியாக பொழுதைக் கழிக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது.


வீடியோவில் குழந்தைகளுடன் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் மிகவும் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. குழந்தைகளின் குறும்புத்தனமான தருணங்களைப் பார்த்த ரசிகர்கள் அதனை ரசித்து வருகின்றனர்.

குறிப்பாக, திரையுலகில் எப்போதும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் நயன்தாரா, குடும்பத்துடன் செலவிடும் இந்த தருணங்கள் ரசிகர்களின் கவனத்தை அதிகம் ஈர்த்து வருகின்றன. வீடியோ வெளியானது முதல் சமூக வலைத்தளங்களில் லைக்குகள் மற்றும் கமெண்ட்ஸ்கள் குவிந்து வருகின்றன.

Advertisement

Advertisement