• Jan 18 2025

'கொரோனா குமார்' சிம்புவும் இல்ல.. விஷ்ணுவும் இல்ல..! வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குநர்

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னால் கோகுல் இயக்கத்தில், சிம்பு நடிக்க இருந்த திரைப்படம் தான் கொரோனா குமார். இந்த படத்தை வேர்ல்ட் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருந்தது.

ஆனாலும் ஒரு சில காரணங்களினால் இந்த படம் கைவிடப்பட்டதாக கூறப்பட்டது. இதை அடுத்து சிம்புவுக்கு பதிலாக விஷ்ணு விஷால் நடிக்க இருப்பதாக கலந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவலாக பகிரப்பட்டு வந்தது.


இந்த நிலையில்,கொரோனா குமார் படத்தில் சிம்புக்கு பதிலாக விஷ்ணு நடிக்கிறார் என்ற செய்தி முற்றிலும் வதந்தி என இயக்குனர் கோகுல் தரப்பில்  மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதாவது, கட்ட குஸ்தி  திரைப்படத்திற்கு பிறகு விஷ்ணு விஷால் நிறுவனம் தயாரிக்கும் படத்தை கோகுல் இயக்க இருக்கிறார். இந்த படம் ஆக்சன் படம் படமாகவும், இதன் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதற்கும் கொரோனா குமார் படத்திற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என தற்போது வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் இயக்குநர் கோகுல்.  


Advertisement

Advertisement