• Jul 07 2025

"கூலி" எனது வாழ்க்கையின் முக்கியமான படம்...! இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஓபன் டாக்..!

Roshika / 7 hours ago

Advertisement

Listen News!

தமிழ்  சினிமாவின் முன்னணிஇயக்குனராக  வலம்  வருபவர் லோகேஷ் கனகரா இவர் பல முன்னணி நடிகர்களை வைத்து திரைப்படங்கள் தயாரித்து பல வெற்றிகளை கண்டுள்ளார். மேலும் இவர் கடந்த ‘விக்ரம்’ மற்றும் ‘லியோ’ படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் புதுமையான முறையில் நாயகனைச் சுற்றி பிரமாண்டமான கதைக்களங்களை உருவாக்கும் இயக்குநராக பெயர் பெற்றவர். ‘லியோ’ படத்திற்கு பிறகு, ரஜினியுடன் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது அவருக்கு தனி களிப்பை ஏற்படுத்தியது.. தற்போது கூலி படத்தினை இயக்கி வருகிறார். தற்போது இவர் கூறிய விடயம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று  வருகின்றது.


மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ரசிகர்களுக்கு வருகிற ஆகஸ்ட் 14 ம் தேதி மிகவும் சிறப்பு நாளாக இருக்கும். காரணம், ‘வேட்டையன்’ திரைப்படத்திற்குப் பிறகு ரஜினி நடித்திருக்கும் புதிய படமான ‘கூலி’ (Coolie) வெளியிடப்படுகிறது. இப்படம் தொடங்கியது முதல் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், தற்போது படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்துள்ளதாகவும், உலகளவில் விநியோக உரிமைகள் ரூ.86 கோடிக்கு விற்பனையாகியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


‘கூலி’ திரைப்படத்தை இயக்கியிருப்பவர் லோகேஷ் கனகராஜ், இவர் கடந்த ‘விக்ரம்’ மற்றும் ‘லியோ’ படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் புதுமையான முறையில் நாயகனைச் சுற்றி பிரமாண்டமான கதைக்களங்களை உருவாக்கும் இயக்குநராக பெயர் பெற்றவர். ‘லியோ’ படத்திற்கு பிறகு, ரஜினியுடன் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது அவருக்கு தனி களிப்பை ஏற்படுத்தியது. ஒரு சமீபத்திய பேட்டியில், லோகேஷ் கனகராஜ் தெரிவித்ததாவது.


“கூலி திரைப்படம் உருவாகும் கடந்த இரண்டு வருடங்களாக நான் திரைப்பட வேலைகளில் மட்டுமே கவனம் செலுத்தினேன். என் குடும்பத்துடன் அல்லது நண்பர்களுடன் கூட நேரம் செலவிடவில்லை. சமூக ஊடகங்களிலிருந்து சற்று விலகியிருந்தேன். இந்த 36 - 37 வருட வாழ்க்கையில் ‘கூலி’ படம் எனக்கு மிக முக்கியமான முயற்சி.” 


"கூலி" என்பது ரஜினிகாந்த் தனது ஆரம்பத்திலிருந்தே வகித்த ஒரு அடையாளம். திரையுலகில் அவர் முதன்முதலில் மக்கள் மனதில் பதிந்தது கூலி வேடங்களில் தான். இப்போது அந்த கருப்பொருளில் தான் அவர் திரும்ப வருகிறார் என்பது ரசிகர்களிடையே nostalgiya உணர்வையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் இப்படம், சாதாரணக் கூலியின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு, சமூக சமத்துவத்தை வலியுறுத்தும் ஒரு பாணியில் உருவாகி இருக்கலாம் எனவும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


ரஜினிகாந்தின் ‘கூலி’ திரைப்படம், தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய திரையுலகமே எதிர்பார்க்கும் ஒரு மிக முக்கியமான படமாக உருவெடுத்து விட்டது. லோகேஷ் கனகராஜ், அனிருத், மற்றும் ஒரு பல்துறை நட்சத்திரக் கூட்டணி ஆகியோரின் ஒத்துழைப்பில் உருவான இந்த படம் ரசிகர்களுக்கு ஒரு கொண்டாட்டமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.  


Advertisement

Advertisement