தென்னிந்திய சினிமாவில் 90’s காலகட்டத்தில் முக்கிய நடிகையாக வலம் வந்தவர் சுஹாசினி மணிரத்னம். தனது மென்மையான நடிப்பால் தமிழில் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் எனப் பல மொழிகளில் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்ட இவர், தற்போது தனது அழகு மற்றும் ஸ்டைலால் மீண்டும் ஒரு முறை வலம் வருகிறார்.
சமீபத்தில் வெளியான புதிய போட்டோஷூட்டில் சுஹாசினி கொடுத்திருந்த ஸ்டைலான போஸ்கள் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றன. வயதை மறந்து இளமையாகவும், ஸ்டைலிஷாகவும் தோன்றும் இவரது லுக், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த போட்டோஷூட்டில் சுஹாசினி பளிச்சென மின்னும் வெளிர் பிங்க் கலர் ட்ரெண்டி ஆடையில் அழகாக காட்சியளிக்கிறார். ஒவ்வொரு புகைப்படத்திலும் அவரது முகத்தில் இருக்கும் கம்பீரமும், ஸ்மார்டான பாணியும், “வயது என்பது மனநிலை தான்!” என்று சொல்வதை உணர்த்துகிறது.
இந்த போட்டோஷூட்டிற்குப் பிறகு, சுஹாசினியின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

Listen News!