இந்திய திரையுலகம் எதிர்நோக்கும் மிகப்பெரிய திரையரங்க போட்டிகளில் ஒன்று, வருகின்ற டிசம்பர் 5ம் தேதி நடைபெற இருக்கிறது. அந்த நாளில் பிரபாஸ் நடிப்பில் உருவான திகில் நகைச்சுவை திரைப்படமான 'தி ராஜா சாப்' மற்றும் ரன்வீர் சிங் நடிப்பில் உருவாகியுள்ள ஆக்சன் டிராமா திரைப்படமான 'துரந்தர்' ஆகிய இரண்டும் ஒரே நாளில் திரைக்கு வர இருக்கின்றன.
இரண்டும் பான் இந்திய படம். இரண்டிலும் பிரபலமான ஹீரோக்கள். ஆனால் வெற்றிக் குரல் யாருக்கு? என்ற கேள்வியே தற்பொழுது ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
‘தி ராஜா சாப்’ என்பது மாருதி இயக்கத்தில், பிரபாஸ் ஹீரோவாக நடித்துள்ள ஒரு தனித்துவமான பான் இந்திய திரைப்படம். இந்த படம், வழக்கமான ஆக்ஷன் மாஸ் கதைகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டு, திகிலும், நகைச்சுவையும் கலந்த குடும்பப் படம் என தெரிவிக்கப்படுகிறது.
இன்னொரு பக்கம், ரன்வீர் சிங் நடிப்பில் உருவாகியுள்ள 'துரந்தர்' திரைப்படம், செம்ம Action entertainer. இப்படத்தின் இயக்குநராக ஆதித்யா தர் செயற்பட்டுள்ளார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
இரண்டும் பான் இந்திய ரிலீஸ் என்றாலும், அதனுடைய கதைக்களம் முற்றிலும் வேறுபட்டது. அத்துடன் டிசம்பர் 5ம் தேதி வெளியாகும் இந்த இரண்டு படங்களும், 2025-ம் ஆண்டின் year-end box office clash என்ற வகையில் பார்க்கப்படுகிறது.
Listen News!