• Sep 17 2024

ஜெமினி மேன் படத்தில் சுட்ட கதைதான் கோட் - ஆ? கடைசில ஒன்னுமே புரியல..! விளாசிய பிஸ்மி

Aathira / 1 week ago

Advertisement

Listen News!

இளைய தளபதி விஜய் நடித்த கோட் திரைப்படம் பெரிய  எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வியாழக்கிழமை வெளியானது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். தற்போது வரையில் இந்த படத்தை விஜயின் ரசிகர்கள் மற்றும் விஜயின் கட்சி தொண்டர்கள் கொண்டாடி வருகின்றார்கள்.

கோட் திரைப்படம் வெளியான முதல் நாளிலேயே 126 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. மேலும் இந்த படத்தில் சிவகார்த்திகேயன், திரிஷா கேமியா ரோலில் நடித்துள்ளது ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளதோடு அது பற்றிய விமர்சனங்களும் வைரலாகி வருகின்றன.

இந்த நிலையில், கோட் படத்தை பார்த்த பிஸ்மி அதில் உள்ள குறைகள் பற்றி வெளிப்படையாக பேசி உள்ளார்.

அதாவது கோட் படத்தில் வரும் மகன் விஜய் கேரக்டரை அப்பா விஜயா வரும் காந்தி கிளைமாக்ஸ் காட்சியில் போட்டு தள்ளி விடுவார். அதன் பின்பு ஜீவனின் க்ளோனிங் அடுத்த பாகத்தில் வரும் என்பது போலத்தான் படம் முடிக்கப்பட்டது நானும் அப்படித்தான் புரிந்து கொண்டேன்.


ஆனால் இந்த படத்தில் ஜீவனாக வந்தவர் மீனாட்சி சௌத்ரியை கொள்வது, இப்படி எல்லா வேலைகளையும் செய்வது க்ளோனிங் தானாம். கடைசியில் வரும் காட்சியில் வருவது தான் விஜய்யின் மகனாம் இதை அந்த நண்பர் சொன்னது நான் ஷாக்காகி விட்டேன்.

இயக்குனர் ஒரு விஷயத்தை நினைத்து படத்தை எடுத்திருக்கின்றார். ஆனால் அது ஆடியன்ஸ்சுக்கும் தெரியல, மீடியாவுக்கும் புரியல என்பது தான் துயரமான விஷயம். வெங்கட் பிரபு ஏன் திடீரென செல்வராகவன் போல் மாறிவிட்டார் என்று தெரியவில்லை.

ஜெமினி மேன் படத்தை பார்த்து தான் கோட் படத்தை எடுத்துள்ளார் வெங்கட் பிரபு. அதில் வில் ஸ்மித்தை போட்டு தள்ள  ஒரு டீம் பிளான் பண்ணி வில் ஸ்மித்தை போலவே  ஒரு  க்ளோனிங்கை செய்வார்கள். கிளைமேக்ஸ் வில் ஸ்மித் தன்னையும் காப்பாற்றி க்ளோனிங்கை காப்பாற்றுவார். இந்த கதையை அப்படியே எடுத்தால் ட்ரோல் பண்ணுவார்கள் என்று தான் அதனை மாற்றி எடுத்துள்ளார் வெங்கட். ஆனால் அவர் என்ன சொல்ல வந்தார் என்பது யாருக்குமே புரியவில்லை என்று கூறியுள்ளார் பிஸ்மி.


 

Advertisement

Advertisement