• Sep 09 2024

வெற்றி கொடியை நாட்டிய விஜய்... தெறிக்கும் கோட் புக்கிங் கலெக்ஷன்...

subiththira / 2 weeks ago

Advertisement

Listen News!

தளபதி விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் திரைப்படம் வெளியாக இருக்கிறது. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படம் பல கோடி பட்ஜெட்டில் தயாராகி இருக்கிறது. இந்நிலையில் இதன் புக்கிங் விபரம் வெளியாகியுள்ளது. 


ரிலீஸிற்கு தயாராகி வரும் நிலையில் படத்தின் சிங்கிள் பாடல்கள், டிரைலர் எல்லாம் வெளியாகி சமூக வலைதளங்களில் பட்டய கிளப்பி வருகிறது. இதற்கு நடுவில் இன்று நடிகர் விஜய் தான் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் கொடியை அறிமுகம் செய்துள்ளார். 


காலையில் இருந்து கொடியின் புகைப்படத்தை ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள். இந்நிலையில் படத்தின் ரிலீஸ் நெருங்கிவரும் நிலையில் புக்கிங் படு சூடாக நடக்கிறது. தற்போது ப்ரீமியர் மற்றும் முதல் நாள் புக்கிங்கில் ஓவர்சீஸில் படம் ரூ. 2.1 கோடி வரை வசூல் செய்துள்ளது. இது இன்னும் கூடலாம் என ரசிகர்கள் எதிர்பாத்திருக்கிறார்கள். 

Advertisement

Advertisement