தமிழ் சினிமாவின் முன்னணி பாடகிகளில் ஒருவராகப் பெயர் பெற்றவர்தான் சின்மயி.
தனது இனிமையான குரலால் மட்டுமல்லாமல், துணிச்சலான குரலாலும் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர்.
குரல் இசை உலகில் மட்டுமல்ல, சமூக பிரச்சினைகளிலும் தன்னுடைய கருத்தை வெளிப்படையாக கூறும் பெண் என்ற பெயரையும் பெற்றுள்ளார்.
பிரபல பாடலாசிரியர் வைரமுத்து மீது, பாலியல் தொல்லை குற்றச்சாட்டுகளை முன்வைத்து #MeToo இயக்கத்தின் போது திறம்பட பேசியவர்.
இதன் விளைவாக சினிமாவில் பாடும் வாய்ப்புகள் குறைந்தாலும், தனது நிலைப்பாட்டிலிருந்து ஒருபோதும் பின்வாங்காமல் நின்றார். இதனால் அவரை ரசிகர்கள் “சிங்கப்பெண்” என்று அழைக்கத் தொடங்கினர்.
சமீபத்தில், மணிரத்னம் இயக்கிய "Thug Life" திரைப்படத்தின் “முத்த மழை” பாடல் மூலம் மீண்டும் இசை ரசிகர்களிடையே பிரபலமாகியுள்ளார்.
சமூகப் பொறுப்புணர்வை வெளிப்படுத்தும் விதமாக, தற்போது பணி நிரந்தரம் கோரி ஆறாம் நாளாக போராட்டத்தில் இருக்கும் தூய்மை பணியாளர்களை நேரில் சந்தித்து, அவர்களின் குறைகளை கேட்டறிந்ததுடன், 500 தண்ணீர் பாட்டில்களையும் வழங்கியுள்ளார்.
இந்நிலையில், சின்மயி அரசியலுக்கு வரப்போவதாகவும், பாஜக கட்சி அவரை அணுகியுள்ளதாகவும் அரசியல் வட்டாரங்களில் செய்திகள் கசிந்து வருகின்றன.
இதுவரை அவர் இதுகுறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடவில்லை.
அவர் அரசியலுக்கு வந்தால் எந்தக் கட்சியில் இணைவார் என்பது குறித்து ரசிகர்களும், அரசியல் வட்டாரங்களும் ஆர்வத்துடன் எதிர்பார்த்து வருகின்றன.
சினிமா, சமூகப் பணிகள், அரசியல் — அடுத்தடுத்த கட்டங்களில் சின்மயியின் பயணம் எந்த திசையில் செல்லும் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டியுள்ளது.
Listen News!