விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பாக்கியலட்சுமி சீரியல் இல்லத்தரசிகளின் அமோக ஆதரவை பெற்று கிட்டத்தட்ட நான்கு, ஐந்து ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வருகின்றது.
இந்த நிலையில் இன்றைய தினம் பாக்கியலட்சுமி சீரியல் நிறைவடைந்துள்ளது. இதன்போது பாக்கியலட்சுமி சீரியலின் மூலம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் என்னவென்று இதில் நடித்த நடிகர்கள் தமது கதாபாத்திரங்களை மூலம் உணர்த்தியுள்ளனர். தற்போது இதனை உணர்வுபூர்வமாக ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றார்கள்.
பாக்கியலட்சுமி சீரியல் பெண்களின் வாழ்வியலை மையமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டது. இதில் கணவனை நம்பி வாழ்ந்த பெண் ஒரு கட்டத்தில் அவரைப் பிரிந்து தனது சொந்த முயற்சியால் தொழில் அதிபராகி தனது பிள்ளைகளை நல்ல நிலைக்கு கொண்டு செல்கின்றார்.
அதைப்போல ராதிகா என்ற கேரக்டர் முதல் திருமணத்தில் தோல்வி அடைந்து இரண்டாவது ஆக கோபியை திருமணம் செய்கின்றார். ஆனால் அதுவும் இறுதியில் தோல்வியில் முடிகின்றது. இறுதியில் தனது குழந்தையை வளர்ப்பதற்கான தைரியமும் பொருளாதாரம் தன்னிடம் உள்ளது என்று பெருமிதம் கொள்கிறார்.
அதேபோல இந்த சீரியலில் வேலைக்காரியாக நடித்த செல்வி கேரக்டரும் தனது மகனை கலெக்டர் ஆக்கி அழகு பார்க்கின்றார். இவ்வாறு இந்த சீரியலில் நடித்த மூன்று முக்கிய கேரக்டர்களும் தமது முயற்சியால் தமது குடும்பத்தை வழிநடத்தி நல்ல நிலைக்கு கொண்டு செல்கின்றனர்.
எனவே பாக்கியலட்சுமி சீரியலில் இறுதியாக பெண்களுக்கு இரண்டு வார்த்தை ஆயுதம் என்றால் அது பைனான்சியல் இண்டிபெண்டன்ஸ் தான் என்று உணர்த்தியுள்ளனர். அதன்படி ஒவ்வொரு பெண்ணுக்கும் பொருளாதார ரீதியாக சுதந்திரம் இருந்தால் யாரையும் எதிர்பார்க்க வேண்டிய அவசியம் இல்லை சமூகத்தில் தன் மரியாதையுடன் நிலைத்து நிற்கலாம் என்பதை இந்த சீரியல் உணர்த்தி உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Listen News!