நடிகை சமந்தா சமீபத்தில் தான் எடுத்துக்கொண்ட சிகிச்சை குறித்து கூறியிருந்த நிலையில் அந்த சிகிச்சைக்கு மருத்துவர் ஒருவர் கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும் சமந்தாவை சிறையில் அடைக்க வேண்டும் என்று கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு சமந்தா மீண்டும் விளக்கம் அளித்து அந்த சிகிச்சை தனக்கு சரியானதாக இருந்தது என்றும் அதை நான் மற்றவர்களுக்கு பரிந்துரை செய்யவில்லை என்றும் விளக்கம் அளித்திருந்தார்.
இந்த நிலையில் சமந்தாவின் இந்த பதிவுக்கு ஆதரவும் எதிர்ப்பும் குவிந்து வரும் நிலையில் திரையுலகை சேர்ந்தவர்களும் தற்போது இது குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக பாடகி சின்மயி கணவர் ராகுல் ரவீந்தர் என்பவர் இதுகுறித்து கூறிய போது ’நடிகை சமந்தா சொல்வது போல் ஒரு மருத்துவரிடம் இது குறித்து விவாதம் செய்யலாம், மருத்துவ உலகில் ஒரு மருத்துவர் ஒரு விஷயத்தை கூறினால், அதை இன்னொரு மருத்துவர் வேறு மாதிரி கூறுகின்றனர். இந்த மாதிரி மருத்துவர்கள் மத்தியிலேயே குழப்பங்கள் இருந்து வரும் நிலையில், சாதாரண மருத்துவ அறிவு கொண்ட சமந்தாவை ஏன் கடுமையாக விமர்சனம் செய்கிறீர்கள்’ என்ற கேள்வி எழுப்பி உள்ளார்.
இதற்கு அந்த மருத்துவர் சமந்தாவை 3.5 கோடி பேர் ஃபாலோ செய்கிறார்கள், அவர்களுக்கு இது தவறாக சென்றடைந்து விடும் என்பதற்காக தான் கூறுகிறேன்’ என்று கூறினார். அதேபோல் பிரபல நடிகர் விஷ்ணு விஷாலின் மனைவி ஜுவாலா கட்டா ‘சமந்தா சொல்வது தவறு என்று தெரிவித்துள்ளார்.
தனிப்பட்ட முறையில் மக்கள் மருந்துகளை எடுக்கக் கூடாது, பரிந்துரை செய்யக்கூடாது என்றும், உடல்நிலை சரியில்லை என்றால் மருத்துவர்களை மட்டுமே அணுகி அவர்களின் அறிவுரையின் பெயரில் தான் மருந்துகளை எடுக்க வேண்டும் என்றும், சமந்தா கூறுவது போல் தனிப்பட்ட முறையில் மருந்துகள் யாரையும் எடுக்க வேண்டாம்’ என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.'
Listen News!