• Sep 28 2024

விஜய் பிறந்தநாளில் கொண்டாட்டத்தின் மேல் கொண்டாட்டம்! உட்சாகத்தில் ரசிகர்கள் !

Nithushan / 3 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் தவிர்க்கமுடியாத நடிகராக இருப்பவர் விஜய் ஆவார். பொதுவாக இவரது திரைப்படங்களுக்கு அதிக எதிர்பார்ப்பு காணப்படுகின்ற நிலையிலேயே சமீபத்தில் இவர் அரசியலுக்கு செல்வதாக கூறியிருந்தார் .


இதன் காரணமாக இவரது படங்கள் ரீரிலீஸ் செய்தாலும் புது பட வெளியீடு போன்று ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். தமிழ் சினிமாவில் ரீரிலீஸ் கலாச்சாரம் அதிகரித்து வரும் நிலையிலேயே புதிதாக ஒரு விஜய் படமும் ரீரிலீஸ் ஆக உள்ளது.


பிரபுதேவா இயக்கத்தில் விஜய், அசின், வடிவேலு நடித்த போக்கிரி படம், விஜயின் 50வது பிறந்தநாளை முன்னிட்டு ஜூன் 21-ஆம் தேதி ரீ ரிலீஸ் ஆகிறது. குறித்த திரைப்படம் வெளியாக்குவதை ரசிகர்கள் திருவிழாவாக கொண்டாட காத்துள்ளனர்.

Advertisement

Advertisement