• Jun 24 2024

இதுக்கு தான் பொறுமை வேண்டும்.. பெருமையாக சொன்ன வனிதா?

Aathira / 2 weeks ago

Advertisement

Listen News!

இயக்குனர் சுகன் இயக்கத்தில் உருவாக உள்ள திரைப்படம் தான் பிதா. சுமார்  8 குறும்படங்களை இயக்கிய இவர், கலா மாஸ்டரிடம் ஆறு ஆண்டுகள் உதவியாளராக பணியாற்றியுள்ளார். மேலும் ஜனனம், கலவரம், உளவுத்துறை போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் ரமேஷ் செல்வவனிடம் உதவித் துணை இணை இயக்குனராக இருந்து தற்போது பிதா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி உள்ளார்.

இந்த படத்தில் அனு, ஆதிஷ் பாலா முக்கிய கேரக்டரிலும், அருள்மணி உட்பட பலர் நடித்துள்ளார்கள்.

இந்தப் படத்தின் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்ற வேளையில்,  தற்கால இளைஞர்களுக்கு பொறுமை ரொம்ப அவசியம் என வனிதா விஜயகுமார் அட்வைஸ் பண்ணியுள்ளார். அதன்படி அவர் கூறுகையில்,


அனைவரது வாழ்க்கையிலும் ஒரு தேடல் இருக்கும். அது தனிப்பட்ட வாழ்க்கை, பர்சனல் என ரெண்டு விதமாக இருக்கும். தனிப்பட்ட வாழ்க்கைக்கு முக்கியத்துவம் அதிகமாக கொடுப்போம் .அதிலும் பெண்கள் அதிகமாக கொடுப்போம். கடைசியில் ஆரம்பித்த இடத்திலேயே வந்து நிற்போம். என்னுடைய வாழ்க்கையும் அப்படித்தான் ஆனால் இன்று சந்தோஷமாக இருக்க காரணம் நான் நடித்த இரண்டு படங்கள் தியேட்டரில் வெளியாகி உள்ளது.

இப்போது பிதா படத்தில் இணைந்தது எனக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது. இது மற்றொரு படத்தின் ஆரம்பமாக கருதுகிறேன். இதை இந்த நிகழ்ச்சியில் சொல்வதற்கு காரணம் பெருமைக்காக இல்லை பொறுமைக்காகத்தான். எத்தனையோ இளைஞர்கள் வாழ்க்கையை முடித்துவிட்டு அவ்வளவுதான் என்று உள்ளார்கள். தேர்வில் தோல்வியடைந்தால் விபரீத முடிவு எடுப்பார்கள், அதேபோல காதல் தோல்வி என்றாலும் விபரீத முடிவு எடுப்பார்கள்.

ஆனால், இதை எல்லாம் தாண்டி தான் வெற்றி இருக்கிறது. சினிமா சாதரமானது இல்லை. பொறுமை வேண்டும் என போகப் போகத்தான் தெரியும் என பேசியுள்ளார்.

Advertisement

Advertisement