• Jan 18 2025

camera man நீ அரசியலுக்கு வாறியா?... பங்கமாய் கலாய்த்த வடிவேலு ... வாங்க வாங்க எல்லோரும் வந்து கட்சி ஆரம்பிங்க ...

Kamsi / 11 months ago

Advertisement

Listen News!

தமிழ் திரைப்படத்துறையில் “வைகைப் புயல்” என அழைக்கப்படும் புகழ்பெற்ற நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் நடிகர் வடிவேலு . 


 வடிவேலு கடந்த சில ஆண்டுகளாக படங்களில் நடிக்காவிட்டாலும் அவரின் வசனங்களை வைத்து தொடர்ந்து மீம்ஸ் போடுகிறார்கள் ரசிகர்கள். அந்த அளவுக்கு  நகைச்சுவையால் மக்கள் மனம் கவர்ந்தவர். இவரை குழந்தைகளின் நகைச்சுவை நாயகன் என்றும் கூறலாம். 


தற்போது  பிரபல நடிகர் விஜய் அரசியல் பற்றி சமூகவலைத்தளங்களில் தீயாக பேசப்பட்டு வருவது நாம் அறிந்ததே .இந் நிலையில்   பிரபலங்களின் நேர் மறையான விமர்சனங்களையும் காணக்கூடியதாக இருக்கிறது . பல பிரபலங்கள்  விஜய்க்கு வாழ்த்துக்கள் தெரிவித்தும் வருகின்றனர் .இந் நிலையில் வைகைபுயல் வடிவேலிடம் விஜய் அரசியல் பற்றி  செய்தியாளர்கள் கேட்கும் போது பங்கமாய் கலாய்த்து பதில் சொல்லி இருக்கிறார் . வாருங்கள் அவர் கூறியதை பார்க்கலாம் , 


"அரசியலுக்கு எல்லாருமே வரலாம் , நீங்க கூட இப்பிடியே வீடியோ எடுத்து கொண்டு இருக்கிறீங்க நீங்களும் வரலாமே இப்பிடியே வீடியோவே எடுக்க போறீங்களா ? நீங்களும் வந்து ஒரு கட்சியை ஆரம்பிங்க , மக்களுக்கு நல்லது செய்யிங்க , ஏன் வேற வேலை இருக்கிறதா ?


வாங்க எல்லோரும் வாங்க வந்து அரசியல் கட்சியை ஆரம்பிங்க , யாராக இருந்தாலும் வரலாம்.எல்லோரும் வந்தார்கள் , பாக்யராஜ் வந்தார் , ராமராஜா எல்லாரும் வந்தார்கள். நல்லது செய்தார்கள், வருகிறவர்களை வரவேற்க வேண்டும். அம்மா இறந்து ஒரு வருடமாக ஆகி விட்டது .


மோட்ச விளக்கு போட தான் நான் வந்தேன். விளக்கு போட்டிட்டு போறேன் என்னைய விடுங்க , யார் அரசியலுக்கு வந்தாலும் நல்லம் தான் . மக்களுக்கு நல்லது செய்துவிட்டு போகட்டும். " இவ்வாறு பங்கமாய் கலாய்த்து வடிவேல் சொன்ன பதில் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.


Advertisement

Advertisement