• Jan 19 2025

மீண்டும் விஜய் டிவி சீரியலுக்கு வரும் பிக்பாஸ் தமிழ் டைட்டில் வின்னர்.. எந்த தயாரிப்பு நிறுவனம்?

Sivalingam / 5 months ago

Advertisement

Listen News!


பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் டைட்டில் பட்டம் வென்றவர் ஏற்கனவே சில சீரியல்களில் நடித்திருந்த நிலையில் தற்போது மீண்டும் சீரியலுக்கு ரீஎண்ட்ரியாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் டைட்டில் வின்னர் பெற்ற அசீம் என்பவர் ஏற்கனவே ’பிரியமானவள்’ என்ற சீரியலில் நடித்திருந்தார் என்பதும் அதன் பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ’தெய்வம் தந்த வீடு’ ’பகல் நிலவு’ போன்ற சீரியல்களில் நடித்து பிரபலமானார் என்பது தெரிந்தது.

குறிப்பாக பகல் நிலவு சீரியலில் அசீம் உடன் பிக்பாஸ் ஷிவானி நாராயணன் நடித்திருந்தார் என்பதும் இந்த ஜோடியின் கெமிஸ்ட்ரி மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது என்பது தெரிந்தது.



இந்த நிலையில் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் அசீம் கலந்து கொண்டு பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்திய நிலையில் அந்த சீசனில் விக்ரமனுக்கு தான் டைட்டில் பட்டம் கிடைக்கும் என்று கூறப்பட்டது. ஆனால் அனைவரும் எதிர்பாக்காத வகையில் அசீம் டைட்டில் பட்டம் கிடைத்த நிலையில் கடந்த சில மாதங்களாக அவர் திரைப்படத்தில் நடிக்க முயற்சி செய்து கொண்டிருந்தார் என்று கூறப்பட்டது.

குறிப்பாக பொன்ராம் இயக்கத்தில் உருவாகயிருக்கும் படத்தில் அசீம் தான் நாயகன் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது அசீம் மீண்டும் சின்னத்திரைக்கு வர இருப்பதாக கூறப்படுகிறது. ’ஈரமான ரோஜாவே’ சீரியலை தயாரித்த தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த சீரியலில் தான் அசீம் நாயகனாக நடிக்க இருப்பதாகவும் அவருக்கு ஜோடியாக நடிக்க முன்னணி தொலைக்காட்சி நடிகை ஒருவரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் இந்த சீரியல் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement