• Jan 19 2025

முத்து கொடுத்த சர்ப்ரைஸ்.. மாட்டிக்கொண்டு முழித்த ரோகிணி..! பார்வதிக்கு வந்த ஐடியா

Aathira / 5 months ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், மீனாவின் தோழிகள் முத்தும் எல்லார் போலவும் ஒரே மாறி தான் என கலாய்க்க, அவர் அப்படி இல்லை என சமாளிக்கின்றார் மீனா. ஆனாலும் அவருக்கு இப்போ போன் போட்டு சாப்பாட்டை பற்றி கேட்குமாறு சொல்ல, மீனாவும் போன் போட்டு கேட்க, முத்து சவாரி செல்வதனால் இந்த டைம்ல விளையாடிக் கொண்டிருக்கிறாயா என பேசி விட்டு வைக்கிறார். இதனால் மீனா 50 ரூபாயை கொடுத்துவிட்டு கோவமாக செல்கிறார்.

மறுபக்கம் விஜயா வீட்டில் எல்லாரும் ஒரு ஒரு மாதிரி இருக்காங்க எனக்கு வீட்ட போக பிடிக்கல என்று பேச, பார்வதி ஸ்டார்டிங்ல பரதநாட்டிய கிளாஸ் ப்ரீயா பண்ணுவோம். அதை டிரஸ்ல எடுப்போம் என்று ஐடியா கொடுக்கிறார். விஜயாவும் சந்தோஷத்தில் உடனே கடைக்கு போவோம் நாள் நல்லா இருக்குது என்று இருவரும் கிளம்புகின்றார்கள்.

இன்னொரு பக்கம் ரோகினி தனது பையனுக்கு கோட் சூட் எடுக்கின்றார். கிரிஷ்க்கு  கால் பண்ணி எது விருப்பமோ அதை செலக்ட் பண்ணி பில் போட அனுப்புகின்றார்.

அதே கடைக்கு விஜயாவும் பார்வதியும் வந்து பரதநாட்டிய டிரஸ் பார்த்து விட்டு ரோகிணியையும் பார்த்து விடுகிறார்கள். அந்த நேரத்தில் ரோகிணியை பார்த்து இங்க என்ன பண்ணுற எனக் கேட்க, தான் கிளைண்டுக்கு டிரஸ் எடுக்க வந்ததாக சொல்கின்றார். அதன் போது கடைக்காரர் இந்த டிரஸ் உங்க பையனுக்கு சூப்பரா இருக்கும் என்று சொல்ல, என்ன பையனா என்று விஜயா அதிர்ச்சி அடைகின்றார்.


ஆனாலும் ரோகினி அது கிளைன்டின் பையன் என்று சொல்லி ஒரு மாதிரி சமாளித்து விடுகின்றார்.  டிரஸ்க்கு காசு கொடுக்கும் போதும் பத்தாயிரம் என்றதும் விஜயா கேள்வி மேல் கேள்வி கேட்க, உங்க பில்லையும் நானே கொடுக்கிறேன் என்று சொன்னதும் அடங்கி விடுகின்றார்.

இதை தொடர்ந்து முத்து வீட்டுக்கு வந்து மீனாவுக்கு சாரி எடுத்து வந்ததாக சொல்ல, மீனா பார்த்துகிட்டு எதுவும் சொல்லாமல் வைத்துவிட்டு செல்கிறார். இதனால் முத்து என்ன நடந்தது என்று கேட்க,  அவர் உங்களால 50 ரூபா தோத்துட்டேன் என்று சொல்ல, முத்து ஒரு மாதிரி சமாதானம் செய்கின்றார். அதன் பிறகு மீனா முத்து வாங்கி வந்த சாரியை கட்டி காட்டுகின்றார்.இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement