• Dec 04 2024

லவ் பேர்ட்ஸ்களை கச்சிதமாக பிரித்த பிக் பாஸ்.. அப்செட்டாகி அழுத சொம்பு தூக்கி அன்ஷிதா

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் தற்போது  12வது நாளில் நடைபெற்று வருகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் அதில் தங்களுக்கான காதல் ஜோடிகளை தேர்ந்தெடுப்பதும், காதலிப்பவர்களை பிக் பாஸ் வீட்டிற்குள் விடுவதும் வழக்கமான ஒன்றாக காணப்படுகிறது.

எனினும் அவர்கள் பிக் பாஸ் வீட்டில் காதலை வெளிப்படுத்திய போதும் நிகழ்ச்சி முடிந்து வெளியில் வந்தவுடன் பிரேக்கப் ஆகி வேறு ஒருவரை திருமணம் செய்து சென்று விடுவார்கள். ஆனாலும் அதற்கு மாறாக ஒரு சிலர் மட்டும் பிக் பாஸ் பிரபலங்களாக இருந்து தற்போது வரை காதலித்து வருகின்றார்கள்.

பிக் பாஸ் சீசன் எட்டிலும் வெளியில் காதலராக பேசப்பட்ட ஜோடி ஒன்று போட்டியாளர்களாக இம்முறை கலந்து கொண்டுள்ளது. இதன் காரணத்தினால் அவர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள்ளும் லவ் பேர்ட்ஸ்களாக இருப்பார்களா? இல்லை சண்டை இட்டு பிரிவார்களா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் காணப்பட்டது.

இந்த நிலையில், இன்றைய நாளுக்கான மூன்றாவது பிக் பாஸ் ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் பிக் பாஸ் அவார்ட்ஸ் நிகழ்ச்சி நடைபெறும் என அறிவிக்கப்பட யார் யாருக்கு என்ன டைட்டில் கொடுக்கலாம் என்றும், வில்லங்கமான டைட்டில் கொடுக்கப்பட்ட போட்டியாளர்களின் ரியாக்ஷனும் குறித்த ப்ரோமோவில் காட்டப்பட்டுள்ளது.


அதன்படி, ஜாக்குலினுக்கு டிராமா குயின் என வந்த உடனே நான் டிராமா குயினா என ஒரு டிராமாவையே அரங்கேற்றி விட்டார். அதன் பின்பு பிக் பாஸ் வீட்டில் சொம்பு தூக்கி என்ற அவார்டை அர்னவ் தனது காதலியான அன்சிதாவுக்கு கொடுத்தார். இதனால் ஆட்டம் சூடு பிடித்தது. இதனை வாங்கிய அன்ஷிதா தன்னை பற்றி நல்லா தெரிந்த ஒருவரே இப்படி பட்டம் கொடுக்கின்றானே என அப்செட்டாகி அழுதுள்ளார்.

தனது மனைவி திவ்யாவை விவாகரத்து செய்த அர்னவ், அதன்பின்  அன்ஷிதாவை காதலித்து வந்தார். தற்போது பிக் பாஸ் வீட்டில்  இவர்கள் பிரேக் அப் செய்வார்களா? இல்லை காதலர்களாகவே வெளியேறுவார்களா? என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் காணப்படுகின்றார்கள்.

Advertisement

Advertisement