• Jan 19 2025

சார் படத்தின் கதை ரொம்ப பழசா? ஆனா இதுக்காகவே படம் பார்க்கலாம்! பப்ளிக் ரிவ்யூ

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

போஸ் வெங்கட் இயக்கத்தில் விமல் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் சார். இந்த படம் இன்றைய தினம் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஆரம்பத்தில் பொன்னரசன் சிவஞானம் என பெயரிடப்பட்ட இந்த படத்திற்கு பிறகு சார் என பெயர் மாற்றப்பட்டுள்ளது. இந்த படத்தை எஸ்எஸ்எஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

சார் திரைப்படம் இன்றைய தினம் தமிழில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் வெளியாகி  உள்ளது. இந்த படத்தில் பருத்திவீரன் சரவணன் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.

இந்த நிலையில், சார் படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம். அதன்படி மாங்கொல்லை கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியராக சரவணன் காணப்படுகின்றார். அவரின் ஆசையே அந்தப் பள்ளியை தரம்மிக்க உயர்நிலை பள்ளியாக உயர்த்த வேண்டும் என்பதுதான். ஆனால் அவருடைய ஆசை நிறைவேற்றுவதற்கு முன்பு அவர் ஓய்வு பெற்று விடுகின்றார். 

தன்னால் செய்ய முடியாததை தனது மகன் விமல் செய்ய வேண்டும் என்ற லட்சியத்தோடு இருக்கின்றார். ஆனால் அந்த கிராமத்தில் பலவிதமான மூடநம்பிக்கைகள் இதனை அடைய விடாமல் காணப்படுகின்றது. இறுதியில் எல்லாம் கடந்து அந்தப் பள்ளியை தரம் உயர்த்தினாரா விமல்? அப்பாவின் கனவை நிறைவேற்றினாரா? என்பது தான் சார் படத்தின் கதையாக காணப்படுகின்றது.


இந்த படத்தை பார்த்த போது மக்கள் மீண்டும் அதே அடக்குமுறை மீண்டும் பழைய காலத்திற்கே சென்று விட்டனர் என்றும் இயக்குனர் சங்கர் 2050 க்கு போகின்றார். ஆனால் இவர் 1947 க்கு போகின்றார். புதுசா எதுவுமே இல்லை. ஒரு முறை தான் இந்த படத்தை பார்க்கலாம் என்று குறிப்பிட்டுள்ளனர்.

ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கல்வியின் அவசியத்தை புரிய வைப்பது தான் சார் படத்தின் கதையாக உள்ளது. இது உண்மை கதை என்று இந்த படத்தின் இயக்குனர் தெரிவித்துள்ளார். இந்த படத்தில் சிறிய குறைகள் இருந்தாலும் சமூகப் பிரச்சினையுடன் வரும் காதல், காமெடி காட்சிகளுக்காக இந்த படத்தை கட்டாயம் பார்க்கலாம்.

Advertisement

Advertisement