• Oct 18 2024

'வீர தீர சூரன்' 34 ஆண்டுகால சாதனையை பெருமைப்படுத்த தரமான சம்பவம் லோடிங்

Aathira / 2 hours ago

Advertisement

Listen News!

நடிகர் விக்ரம் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் தான் தங்கலான். இந்த படத்தில் தனது கடின உழைப்பை வெளிகாட்டி இருப்பார் விக்ரம். தங்கலான் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை பா. ரஞ்சித் இயக்கியிருந்தார்.

இதை தொடர்ந்து விக்ரம் நடிப்பில் அருண்குமார் இயக்கத்தில் உருவாக உள்ள திரைப்படம் தான் வீர தீர சூரன். இந்த படம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அதிகார்வ பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஏப்ரல் மாதம் முதல் படப்பிடிப்புகள் நடைபெற்று வருகின்றது. இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்துள்ளார்.

வீர தீர சூரன் படத்தின் படப்பிடிப்புகள் பெரும்பாலும் மதுரை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தான் நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டது. இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடித்துள்ளார். மேலும் எஸ்.ஜே சூர்யா உட்பட பலர் நடித்து வருகின்றார்கள்.

ஹெச்.ஆர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தின் இரண்டாம் பாகம் தான் முதலில் தயாராகி வருவதாகவும், முதல் பாகம் இன்னும் சில மாதங்களில் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.


இந்த நிலையில், வீர தீர சூரன் படத்தின் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி அனைத்து நடிகர்கள் மற்றும் டெக்னீசியன்கள் பிசியாக இருப்பதால் இறுதி கட்ட படப்பிடிப்புக்கு தயாராகி வருகின்றனர். 

34 ஆண்டுகள் சாதனை செய்த சீயான் விக்ரம் அவர்களை பெருமைப்படுத்தும் வகையில் ஒரு சிங்கிள் போஸ்டர் வெளியிட்டால் அது முறையாகாது. ஆகவே ரசிகர்கள் ஆச்சரியப்படும் அளவுக்கு ஒரு சம்பவம் விரைவில் அறிவிக்கப்படும் எனவும்  ஷிபு தமீன்ஸ் தெரிவித்துள்ளார்.


Advertisement