• Jan 18 2025

அவர பார்த்தா வேலைக்காரன் மாதிரி தெரியுதா? இயக்குனர் சங்கர் செய்த வேலை! கொந்தளிக்கும் பரத் ரசிகர்கள்!

Nithushan / 9 months ago

Advertisement

Listen News!

ஹாலிவுட் , பாலிவுட் திரைப்படங்கள் அசத்தலான கிராபிக் காட்சிகளுடன் வளர்ந்து சென்ற நிலையில் தமிழ்  சினிமா பழைய படங்களாக காணப்பட்டது. இந்த நிலையை மாற்றி தமிழ் சினிமாவை வளர்த்து விட்ட பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் ஆவார். இவரது இயக்கத்தில் ரஜனியின் நடிப்பில் வெளிவந்த 2.0 திரைப்படம் இன்றளவிலும் அதிக வசூல் செய்த தமிழ் திரைப்படமாக காணப்படுகின்றது. இந்த நிலையிலேயே சங்கர் செய்த ஒரு செயல் பலரை ஆச்சரியப்படுத்தி உள்ளது.


இயக்குனர் சங்கர் அவர்களின் மூத்த மகலான ஐஸ்வர்யா சங்கர் அவர்களின் திருமணமானது நடைபெற உள்ளது. இது இவருக்கு இரண்டாவது திருமணம் என்பதும் குறிப்பிடத்தக்கது. சங்கர் இந்திய அளவில் பிரபலமான இயக்குனர் என்பதால் பல சினிமா பிரபலங்களுக்கு அழைப்பிதழ் வழங்க வேண்டிய சூழ்நிலை ஏற்றப்பட்டுள்ளது.


இதனால் சங்கர் புதிய முடிவொன்றை எடுத்து அழைப்பிதழ் வழங்கும் பணியை பகுதி பகுதியாக பிரித்துள்ளார். அந்த வகையிலேயே நடிகர் பரத்தை சினிமாவுக்கு அறிமுக படுத்தியவர் சங்கர் ஆவார். அந்த நட்பின் காரணமாக நடிகர்களுக்கு அழைப்பிதழ் வழங்கும் பொறுப்பை பரத்திற்கும் , நடிகைகளுக்கு வழங்கும் பொறுப்பை இரண்டாவது மகளான அதிதி சங்கருக்கும் , இயக்குனர்களுக்கு அழைப்பிதழ் வழங்கும் பொறுப்பை இவரது நெருங்கிய நண்பரான இயக்குனர் லிங்குசாமிக்கும் பிரித்து  கொடுத்துள்ளதாக வலைப்பேச்சு அந்தணன் கூறியுள்ளார். 

Advertisement

Advertisement