• Jul 27 2024

சந்தேகமே இல்லை.. ஹாலிவுட் படத்தின் ரீமேக் தான் விடாமுயற்சி! ஒரு சீன்ல மொத்த சோலியும் முடிஞ்சா?

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில், லைகா தயாரிப்பில் அஜித் குமார், திரிஷா, ரெஜினா கசாண்ட்ரா, அர்ஜுன் மற்றும் ஆரவ் நடிப்பில் உருவாகும் திரைப்படம் தான் விடாமுயற்சி.

இந்த படத்தில் நடிகர் அஜித் குமார் அஜர்பைஜானில் நடைபெற்ற ஷூட்டிங்கில் கார் ஓட்டிக் கொண்டு சென்று விபத்தில் சிக்குவது போன்ற காட்சி நேற்றைய தினம் வெளியாகி மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

குறித்த விபத்திற்கு பின்னர் படப்பிடிப்பு இடைநிறுத்தப்பட்ட நிலையில், மீண்டும் ஏப்ரல் பத்தாம் திகதி இந்த படத்தின் சூட்டிங் ஆரம்பமாகும் என தகவல்  வெளியாகி  இருந்தது.

விடாமுயற்சி படத்தில் இருந்து இவ்வாறு விபத்து காட்சி வெளியானதும் இதனைப் பார்த்த ரசிகர்கள் ஒரு படத்திற்காக அஜித் எவ்வளவு ரிஸ்க் எடுத்துள்ளார் என பேசி வருகிறார்கள்.


இந்த நிலையில், அஜித் நடிக்கும் விடாமுயற்சி படம் ஹாலிவுட் படம் ஒன்றின் காப்பி என தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதாவது, 1997ம் ஆண்டு வெளியான 'பிரேக்டவுன்' என்ற ஹாலிவுட் படத்தின் காப்பி தான் இது என கூறப்படுகிறது. குறித்த படத்தில் ஒரு தம்பதியினர் கலிபோர்னியாவிற்கு நாடு கடந்து செல்லும் போது, ​​அவர்களின் கார் ஒரு வெறிச்சோடிய பகுதியில் பழுதடைந்து, மனைவி காணாமல் போகிறார். காணாமல் போன மனைவிக்கான கணவனின் வெறித்தனமான தேடல் பற்றிய கதையை தான் அந்த படம் வெளிப்படுத்துகிறது.

அதேபோலத்தான் இந்த படத்தில் அஜித்துக்கு எதிராக ஆராவ் நெகட்டிவ் ரோலில் நடித்திருப்பார் என்றும், அஜித் தனது மனைவியை கண்டுபிடிக்க ஆரவ்வை அடித்து கட்டிப்போட்ட சண்டையில் தான் இந்த கார் விபத்து நடைபெறும் எனவும் ரசிகர்கள் படத்தின் காட்சிகளை வைத்து கதையை கணிப்பிட்டுள்ளனர்.

லோகேஷ் இயக்கிய லியோ படமும் ஹாலிவுட் படம் ஒன்றின் தழுவல் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அஜித் படமும் பிரேக்டவுன் படத்தின் ரீமேக்காக இருக்குமோ என்கின்ற கேள்வி எழுந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement