• Jan 18 2025

நடிகை மீரா ஜாஸ்மின் வீட்டில் ஏற்பட்ட சோகம்.. இரங்கல் கூறும் திரையுலக பிரபலங்கள்..!

Sivalingam / 9 months ago

Advertisement

Listen News!

நடிகை மீரா ஜாஸ்மின் வீட்டில் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதை அடுத்து உலகினர் அவருக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறி வருகின்றனர்.

தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்த மீரா ஜாஸ்மின் தற்போது தன் வயதுக்கேற்ற சில படங்களில் நடித்து வருகிறார். விஜய் நடித்த ’புதிய கீதை’ அஜித் நடித்த ’ஆஞ்சநேயா’ விஷால் நடித்த ’சண்டக்கோழி’ மணிரத்தினம் இயக்கிய ’ஆயுத எழுத்து’ உட்பட பல திரைப்படங்களில் அவர் நடித்துள்ளார் என்பதும் பல சூப்பர் ஹிட் படங்களிலும் அவர் நாயகியாக நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகை மீரா ஜாஸ்மின் தற்போது இரண்டாவது இன்னிங்சில் சில படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது அவருடைய வீட்டில் திடீரென ஒரு பெரும் சோகம் ஏற்பட்டுள்ளது. அதாவது மீரா ஜாஸ்மின் தந்தை ஜோசப் என்பவர் கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவாக இருந்த நிலையில் நேற்று அவர் காலமானார். 83 வயதான அவர் எர்ணாகுளத்தில் உள்ள வீட்டில் காலமானதை அடுத்து இந்த சோகத்தை தனது சமூக வலைத்தளத்தில் மீரா ஜாஸ்மின் பகிர்ந்து உள்ளார். இதனை அடுத்து திரையுலகினர் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

மேலும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மீரா ஜாஸ்மின்   அப்பாவுடன் எடுத்த சில புகைப்படத்தை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஏற்கனவே நடிகை மீரா ஜாஸ்மின் கடந்த 2014 ஆம் ஆண்டு துபாய் சாப்ட்வேர் இன்ஜினியரை திருமணம் செய்த நிலையில், அதன் பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து பெற்றோருடன் தான் கடந்த சில ஆண்டுகளாக வசித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது அவருடைய தந்தையும் காலமானதை அடுத்து அவருக்கு பெரும் சோகம் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement