• Jan 18 2025

வாழை ஹவுஸ்ஃபுல்லா! அப்போ கோட் என்னாச்சி! கோட் பார்த்த விஜய் வெறியன் என்ன சொல்றாருனு பாருங்க!

subiththira / 4 months ago

Advertisement

Listen News!

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் இரண்டு வேடங்களில் சிறப்பாக நடித்த கோட் படம் நேற்று தியேட்டர்களில் ரிலீஸானது. இப் படத்திற்கு கலவையான விம்ரசனம் வந்திருக்கிறது. கோட் படத்திற்கு வந்த விமர்சனங்களை பார்த்த விஜய்யின் தீவிர ரசிகர் ஒருவர் படம் ரொம்பவே சுமார் தான். த்ரிஷா டான்ஸ் நல்லா இருந்தது. 


ஆனால் பாட்டு தான் நல்லா இல்லை. சிவகார்த்திகேயன் வரும் காட்சி நன்றாக இருந்தது. டீஏஜிங் தொழில்நுட்பம் மூலம் வந்த விஜய் கதாபாத்திரம் நன்றாக இல்லை. படத்தின் பெரிய எதிரியே இசை தான். பி.ஜி.எம். கொடூர மொக்க. ஓபனிங் ஃபைட்டே நல்லா இல்ல. கிராபிக்ஸும் சரி இல்லை, மோகன் நடிப்பும் சரியில்லை என்றார்.


நேற்று கோட் படம் பார்த்த விஜய் ரசிகர்களோ இது லியோவை விட நல்லா இருப்பதாக தெரிவித்தார்கள். ஆனால் இன்றோ கோட் படத்திற்கு சுறா எவ்வளவோ பரவாயில்லை என்கிறார்கள். சுறா படம் நிஜமாகவே நல்லா இருந்துச்சுங்க என்கிறார்கள். இதற்கிடையே கோட் படம் ரிலீஸான அன்று வாழை படம் ஹவுஸ்ஃபுல்லாக ஓடியது தெரிய வந்திருக்கிறது.


தியேட்டரில் எடுக்கப்பட்ட புகைப்படத்துடன் அந்த செய்தியை எக்ஸ் தளத்தில் தெரிவித்ததே இயக்குநர் மாரி செல்வராஜ். விஜய் படம் ரிலீஸான அன்று ஆகஸ்ட் 23ம் தேதியே வெளியான வாழை படம் ஹவுஸ்ஃபுல்லாக ஓடியிருக்கு என்று கூறியுள்ளார். 



Advertisement

Advertisement