• Apr 01 2025

He’s back..!! பிக்பாஸில் கம்பீரமாக வெளியேறிய அருணுக்கு அர்ச்சனா கொடுத்த வரவேற்பு

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் சீசன் 8ல் மொத்தமாக 24 போட்டியாளர்கள் பங்கு பற்றியிருந்தார்கள். இவர்களில் அதிகமானவர்கள் விஜய் டிவி பிரபலமாகவே காணப்பட்டனர். தற்போது இந்த வாரம் நடைபெற உள்ள இறுதி பைனலில் ஆறு போட்டியாளர்களே நுழைந்து உள்ளார்கள்.

இந்த வாரம்  இறுதியாக நடைபெற்ற டபிள் எவிக்சனில் தீபக் மற்றும் அருண் ஆகியோர் எதிர்பாராத விதமாக எலிமினேட் ஆகி வெளியே சென்றனர். இது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இருவருமே பைனல் லிஸ்ட்குள் நுழைவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஏமாற்றம் தான் மிஞ்சியது.

d_i_a

இதில் பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர்தான் அருண். பிக் பாஸ் வீட்டிற்குள் இவர் அமைதியான ஒருவராகவே காணப்பட்டார். இவர் நடிப்பதாக பல கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது. ஆனாலும் இறுதிவரை எந்த சண்டை சச்சரவும் இல்லாமல் இவரது கேம் பிலே காணப்பட்டது.


அருண் சீரியல் நடிகையும் பிக்பாஸ் டைட்டில் வின்னருமான அர்ச்சனாவை காதலிப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகின. ஆனால் இருவரும் மௌனம் காத்து வந்த நிலையில், இறுதியாக பிக்பாஸில் நடந்த பிரீ டாஸ்க்கில் தமது காதலை உலகறிய செய்திருந்தார்கள்.

இந்த நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட்டான  அருண், நேரடியாக அர்ச்சனாவை சந்தித்துள்ளார். தற்போது இது தொடர்பான வீடியோவை தனது இன்ஸ்டா  பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகின்றது.

Advertisement

Advertisement