• Jan 18 2025

அவ விளங்கவே மாட்டா.. வாய் அழுகிவிடும்.. ஷகிலா குறித்து பயில்வானின் ஆவேச பேட்டி..!

Sivalingam / 8 months ago

Advertisement

Listen News!

சமீபத்தில் ஷகிலா மற்றும் குயிலி உடன் உரையாடிய பயில்வான் ரகுநாதன் தனது மகள் குறித்து பேசியவுடன் டென்ஷன் ஆனார் என்பதும் உங்கள் மகள் குறித்து பேசியவுடன் டென்ஷன் ஆகிறீர்களே, அது போல் தானே மற்ற நடிகைகளை பற்றி நீங்கள் பேசும்போது அவர்களுக்கு இருக்கும் என்று ஷகிலா கிடுக்கிப்பிடி கேள்வி கேட்ட வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது..

இந்த நிலையில் சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு பயில்வான் ரங்கநாதன் பேட்டி அளித்தபோது ஷகிலா குறித்து அவர் கடுமையாக விமர்சனம் செய்தார். எனது மகளை பற்றி தரக்குறைவாக பேசிய ஷகிலா வாய் அழுகிவிடும் என்றும் அவர் விளங்கவே மாட்டா என்றும் கூறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் தனது மகள் யாரையும் காதலிக்கவில்லை என்றும் தனது மகள் லெஸ்பியன் இல்லை என்றும் எந்த வித அடிப்படை ஆதாரமும் இல்லாமல் தனது மகள் குறித்து குற்றச்சாட்டு கூறுவது முறையல்ல என்றும் அவர் கூறினார். உடனே அவரை பேட்டி எடுத்த நபர் ’அதேபோல் தானே நீங்கள் நடிகைகளை பற்றி பேசும்போது அவர்களுக்கு இருந்திருக்கும்?  நடிகைகள் குறித்து தவறாக பேசும் உங்களிடம் எந்த ஆதாரம் இருக்கிறது’ என்று கேள்வி கேட்டபோது நான் இந்த பேட்டியை முடித்துக் கொள்கிறேன்’ என்று அவர் எழுந்து செல்ல முயலும் காட்சிகளும் அதில் உள்ளன.

மேலும் பயில்வான் ரங்கநாதனை அடிக்க வந்த ரேகா நாயர், பயில்வான் முன்னிலையிலேயே அவரை விமர்சனம் செய்தார். ’நான் அம்மணமாக நடித்தால் இவருக்கு என்ன? இவர் மனைவியும் மகளும் என்ன செய்கிறார்கள்? எங்கே போகிறார்கள்? என்று அவருக்கு தெரியுமா? என்று கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Advertisement