இயக்குநர் மிஸ்கின் பட ரிலீஸ் ஒன்றில் கதைத்தது தற்பொழுது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது. அவர் அதில் bad girl திரைப்படம் பற்றி கவலையாக கூறியுள்ளார். அதில் மிஸ்கின் கூறுகையில் ஒரு படத்தின் டிரெய்லரை பார்த்து விட்டே அதனை வெளியிடக் கூடாது எனக் கூறுவது நியாயமற்றது என்றார்.
மேலும், ஒரு படத்தை வெளியிடக் கூடாது எனக் கூறுவதற்கு எத்தனை காரணங்கள் இருந்தாலும் படத்தின் டிரெய்லரை பார்த்துவிட்டு கூறுவது தவறான விடயம் என்றார். அத்துடன் இந்தப் படத்தை ஒரு பெண் தான் இயக்கியுள்ளார். எனவே அந்த பெண்ணிற்கு இதனால் மிகுந்த வருத்தமாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் திரையுலகில் பெண் இயக்குனர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ள நிலையில் தற்பொழுது இப்படி செய்வதன் ஊடாக முன்னேறக்கூடிய பெண்களும் இதனால் நம்பிக்கை இல்லாது போய் விடுவார்கள் என்றார் மிஸ்கின். அத்துடன் அந்தப் படத்தினை வெளியிடுவதற்கு அனைவரும் உதவி செய்யவேண்டும் எனவும் கூறியுள்ளார்.
Listen News!