அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்த திரைப்படம் தான் டிராகன். இந்த படம் எதிர்வரும் 21 ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. இதில் அனுபாமா, கயடு லோகர் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்கள்.
இந்த நிலையில், டிராகன் படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்வு நேற்றைய தினம் சென்னையில் நடைபெற்ற போது அதில் இயக்குநர் மிஷ்கின் பேசிய விடயங்கள் வைரலாகியுள்ளது.
அதன்படி அவர் கூறுகையில், பிரதீப் ரொம்ப நல்ல பையன். அவனைப் பற்றி என்னுடைய அசிஸ்டன்ட் கிட்ட நிறையவே சொல்லி இருக்கேன். ஆனா அவங்க என்னை விட திமிரு பிடித்தவர்கள். அவர்கள் என்ன சார் அவன் பெரிய வெங்காயமா? என்று கேட்பார்கள் நானும் ஆமா அவன் பெரிய வெங்காயம் தான் சொல்லுவேன் .
அவன் கூட நடிச்சதை நினைத்து நான் ரொம்பவே பெருமைப்படுகிறேன். பிரதீப் ஒரு ப்ரூஸ்லி. இதுவரைக்கும் அவன் ஆக்சன் படம் பண்ணல. இனி என் கூட பண்ணினாலும் பண்ணுவான். ரொம்ப நாளைக்கு பிறகு சினிமால இளமையான ஸ்டார் பாக்குறேன்.
இது லக்குல நடந்த விஷயம் இல்ல. இதற்காக அவன் நிறையவே வியர்வை சிந்தி உழைச்சி இருக்கான். இந்த படத்துல அவனுக்கு நான் வில்லன். ஆனாலும் நல்ல வில்லன். ரொம்ப அர்ப்பணிப்போட வேலைகளை கவனிப்பார்.
இப்போ இருக்கிற நடிகர்கள் எல்லாம் நான்கு படத்துல நடிப்பாங்க அதற்குப் பிறகு உயரமே இல்லாம ரெண்டு அடி வளர்ந்திடுவாங்க. ரசிகர் மன்றம் வச்சி அவங்களுக்கு பின்னால 200 பேர் திரிவாங்க. இது எல்லாம் எதுக்கு என்றே தெரியவில்லை.
படம் பண்றதுக்காக பிரதீப்பிற்கு ஐஸ் வைக்கிறன் என சொல்லுவாங்க. ஆனா அவனுக்கு இந்த சின்ன வயசுலயே நிறைய ரசிகர்கள் இருக்காங்க. மேலும் பிரதீப் 200 வருஷம் வாழனும் என்று புகழ்ந்து பேசி எமோஷனல் ஆகியுள்ளார் மிஸ்கின்.
Listen News!