பிரபல இசையமைப்பாளர் மற்றும் இயக்குநர் கங்கை அமரனின் இளைய மகன் தான் பிரேம்ஜி. இவர் காமெடி நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் பெரிதளவில் நடிக்கா விட்டாலும் இவர் நடித்த ஒரு சில படங்களின் மூலமே தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார்.
பிரேம்ஜியின் அண்ணனான வெங்கட் பிரபு இயக்கும் படங்களில் கட்டாயம் இவருடைய பங்களிப்பு இருக்கும். அந்த வகையில் மங்காத்தா, கோட், சென்னை 600 028, மாநாடு, பிரியாணி போன்ற படங்களில் மாஸாக நடித்துள்ளார். அதில் இவருடைய காமெடிகளும் ரசிகர்களை கவரும் வகையில் அமைந்தது.
பிரேம்ஜி தனிப்பட்ட வாழ்க்கையில் 45 வயது வரை முரட்டு சிங்கிளாகவே காணப்பட்டார். ஆனாலும் யாருமே எதிர்பாராத விதத்தில் இந்து என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமணம் திருத்தணி முருகன் கோவிலில் மிகவும் எளிமையாக நடந்தது.
அதன் பின்பு பிரேம்ஜி தனது காதல் மனைவிக்காக செய்யும் வீட்டு வேலைகள் தொடக்கம் அவரை அக்கறையாக சமைத்து கவனித்துக் கொள்ளும் விதம் வரை ஒவ்வொன்றையும் இன்ஸ்டா பக்கத்தில் வெளியிடுவார். இதைப் பார்த்த பலரும் எப்படி இருந்த பிரேம்ஜி இப்படி ஆகிவிட்டாரே என தமது கருத்துக்களை பகிர்ந்தும் வந்தார்கள்.
இந்த நிலையில், இன்றைய தினம் பலரும் காதலர் தினத்தை கொண்டாடி வரும் நிலையில் தனது காதல் மனைவியுடன் காதலர் தினத்தை கொண்டாடியுள்ளார் பிரேம்ஜி. இதனை முன்னிட்டு இருவரும் இருக்கும் ரொமாண்டிக் வீடியோவை இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ,
Listen News!