• Jan 18 2025

படுதோல்வியடைந்த அயலான்... ஆனாலும் அயலான் 2 -க்கு அக்ரீமெண்ட் ரெடியாம்?

Aathira / 11 months ago

Advertisement

Listen News!

இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த 12ம் திகதி வெளியான திரைப்படம் தான் அயலான். 

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகிய இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார்.

ஏலியன் பூமிக்கு வந்தால் என்ன ஆகும் என்பதை ஒன்லைனாக கொண்டு தான் இப்படம் உருவானது.


படத்தின் கிராபிக்ஸ் பணிகள் மெய் சிலிர்க்க வைப்பதாகவும், கதை சாதாரண கதைதான் என்றாலும் ஏலியனையும், தன்னுடைய ஸ்க்ரீன் பிளேவையும் வைத்து ரவிக்குமார் காப்பாற்றிவிட்டார் என்றும் ரசிகர்கள் கூறியுள்ளார்கள்.

எனினும், அயலான் படம் எதிர்பார்த்த அளவில் வசூலை பெறவில்லையாம். இதனால் கேரளாவில் அயலான் திரைப்படம் படுதோல்வியடைந்தது. 

இதை தொடர்ந்து, வெளிநாட்டில் அயலான் படத்தின் மொத்த  வசூல் ரூ. 18 கோடி மட்டுமே கிடைத்துள்ளதாம்.


இதனால் வெளிநாட்டிலும் அயலான் திரைப்படம் தோல்வி என தகவல் வெளியாகியுள்ளது. இப்படியொரு நிலைமை இருக்க அயலான் 2 குறித்து தொடர்ந்து தகவல்கள் வெளியாகி கொண்டு இருக்கிறது.

இந்தப் படத்தின் இரண்டாவது பாகத்திற்கான ஒப்பந்தம் கடந்த சில தினங்களுக்கு முன்பு போடப்பட்டுள்ளதோடு,  படத்தின் VFX வேலைகள் முன்னதாகவே ஆரம்பிக்கவுள்ளதாம். இதற்காக 50 கோடி ரூபாயை தயாரிப்பு தரப்பு ஒதுக்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


 

Advertisement

Advertisement