• Sep 01 2025

மலை போல குவியும் விருதுகள்.. தேவயானியின் 'கைக்குட்டை ராணி' படத்திற்கு இப்டி ஒரு வரவேற்பா?

subiththira / 1 hour ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பல நூற்றாண்டுகளாக நடிப்புப் பயணத்தில், பல திறமைகளைப்  படி படியாக வெளிக்காட்டி வந்த நடிகை தேவயானி தற்பொழுது புதிய அவதாரத்தைத் தொடங்கியுள்ளார். அதுவேறு ஒன்றுமில்லை இயக்குநராக தன்னை உயர்த்தியுள்ளார் நடிகை தேவயானி.


அவர் முதன்முறையாக தயாரித்து இயக்கியுள்ள குறும்படம் 'கைக்குட்டை ராணி' சமூக வலைத்தளங்களில் மிகுந்த வரவேற்பையும், சர்வதேச திரைப்பட விழாக்களில் பரிசுகளையும் பெற்றுக் கொண்டிருக்கிறது.

நடிகை தேவயானி தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என பல மொழிகளில் நடித்துத் தன்னம்பிக்கையும், தனித்துவமான நடிப்புமாக ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக விளங்கினார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு, இயக்குநராகவும் அவர் திரைத்துறைக்குத் திரும்பினார்.


அவரது இயக்கத்தில் உருவான "கைக்குட்டை ராணி" என்பது 20 நிமிடங்களுக்கு ஓடும், நெஞ்சை நெகிழ வைக்கும் ஒரு உணர்வுபூர்வமான குழந்தை மையப்படம். இது குழந்தைகளின் உணர்வுகளை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. 

இந்த படம் சமீபத்தில் கொல்கத்தாவில் நடைபெற்ற 'ரித்து ரங்கம் விருது விழா'வில், மூன்று முக்கியமான பிரிவுகளில் விருதினை வென்றுள்ளது. அதாவது, சிறந்த இசை, சிறந்த பாடகி, மற்றும் சிறந்த போஸ்டர் என்ற 3 பிரிவுகளில் விருதினை வென்ற இந்தக் குறும்படம் படைப்பாற்றலையும், கலையின் ஒட்டுமொத்த அணுகுமுறையையும் காட்டுகின்றது.

Advertisement

Advertisement