• Sep 28 2025

விஜய் டிவி புகழுக்கு இப்டி ஒரு திறமை இருக்கா.? இது தெரியாமலே போச்சே..! ஷாக்கில் ரசிகர்கள்!

subiththira / 3 weeks ago

Advertisement

Listen News!

விஜய் டிவியின் புகழ்பெற்ற காமெடி குக்கிங் ஷோவான "குக் வித் கோமாளி" மூலம் தமிழ் ரசிகர்களிடையே வெகுவாக பிரபலமானவர் நடிகர் புகழ். அழகான நகைச்சுவை உணர்வும், நேர்மையான நடிப்பும், எளிமையான அணுகுமுறையுடனும் பிரபலமாகிய இவர், இன்று சினிமா உலகிலும் வெற்றிகரமாக திகழ்ந்து வருகிறார்.


தற்பொழுது நடிகர் புகழ் தனது திருமண நாளை மனைவியுடன் இனிதாகக் கொண்டாடி வருகிறார். இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அழகான புகைப்படங்களுடன் கூடிய பதிவொன்றை வெளியிட்டுள்ளார். 


அதில் அவர், "காதல் என்ற கடலில் மூழ்கினேன் என் முத்தாகிய உனை எடுக்க! உன் அன்பின் ஆழம் அதிகரிக்க, மூழ்கிக் கொண்டேயிருக்கிறேன்! நீ கடமை எனும் சிப்பிக்குள்... நானோ காதல் எனும் கடலுக்குள்... நீயும் விடுவதாயில்லை... நானும் எழுவதாயில்லை... Happy anniversary uyire..."என்று  தெரிவித்துள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள் புகழ் தனது மனைவிக்காக கவிதை எல்லாம் எழுதுறாரே என்று ஷாக் ஆகியுள்ளனர்.


Advertisement

Advertisement