நடிகர் தனுஷ் இயக்கி நடித்த இட்லி கடை படம் எதிர்வரும் அக்டோபர் முதலாம் தேதி அன்று ரிலீஸாக உள்ளது. இதற்காக மதுரையில் இந்த படத்தின் படப் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அதில் தனுஷ், அருண் விஜய், பார்த்திபன் உள்ளிட்ட பல பிரபலங்கள் பங்கேற்றனர்.
குறித்த விழாவில் தனுஷ், அருண் விஜய், பார்த்திபன் பேசிய கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. அதில் இளைஞர்களுக்கு அட்வைஸ் பண்ணி உள்ளார் தனுஷ்.
மேலும் தான் ஆரம்பத்தில் கஷ்டப்பட்டு தான் இந்த நிலைக்கு வந்ததாக மிகவும் உருக்கமாக பேசியிருந்தார். இது இளைஞர்களுக்கு எனர்ஜி பூஸ்ட்டாக அமைந்துள்ளது. மேலும் மீண்டும் படிப்பு தான் முக்கியம் என இந்த மேடையிலும் வலியுறுத்தியுள்ளார்.
இந்த நிலையில், தன்னை உருவக் கேலி செய்தது பற்றியும் மனம் விட்டுப் பேசி உள்ளார் தனுஷ்.
அதன்படி அவர் கூறுகையில், பதினாறு வயதில் கேமரா முன்னாடி வந்து நிற்கும்போது இது எல்லாம் ஒரு மூஞ்சா? என்று கேட்டார்கள். அப்போதே நான் போட ஆரம்பித்த ஸ்விம்மிங் தான்.. இப்ப மட்டும் போட்டுக் கொண்டே தான் இருக்கேன்.. சுனாமிலையே ஸ்விம்மிங் போட்டுட்டு வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்று கலகலப்பாக பேசியுள்ளார்.
Listen News!