• Jan 18 2025

மகனுடன் மீன்சந்தை சென்ற அருண் விஜய்! வெளியாகிய புகைப்படங்கள்!

subiththira / 9 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் பிரபல துணை நடிகரான விஜயகுமாரின் மகனும் நடிக்கருமானவர் அருண் விஜய் ஆவார். சுந்தர்சி இயக்கத்தில் தயாரான "முறைமாப்பிள்ளை" திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு  அறிமுகமானவர் ஆவார்.


தொடர்ந்து பல திரைப்படங்களில் இவர் நடித்திருந்தாலும் கௌதம் வாசுமேனன் இயக்கத்தில் அஜித்தின் நடிப்பில் வெளியாகிய "என்னையறிந்தால்" திரைப்படத்தில் இவர் நடித்த நெகட்டிவ் கதாபாத்திரத்தின் மூலமே பெரிதும் பேசப்பட்டார். 


சமீபத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவான மிஷன் எனும் வெப் சீரிஸ் வெற்றி நடை போடுகின்றது. இந்த நிலையிலேயே நெகிழ்ச்சியான செயலொன்றை செய்துள்ளார் அருண்விஜய். அருண் விஜய்க்கு அர்னவ் விஜய் என்ற ஒரு மகனும் உள்ளார்.

தற்போது தனது மகனுடன் இணைந்து ஆட்டோ மூலம் மீன் சந்தைக்கு சென்று மக்களுடன் சகஜமாக பழகி வந்துள்ளார். குறித்த இந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு "எளிமையான வாழ்க்கை எளிமையான மக்கள் , இவர்களிடம் இருந்து அதிக அன்பும் அக்கறையும் கிடைக்கிறது " என்று கூறியுள்ளார்.


சமீப கால சினிமா பிரபலங்கள் சொகுசு வாழ்க்கையை வாழ்ந்துகொண்டு , சொகுசு வாகனங்களில் திரியும் நேரத்தில் அருண்விஜய் தனது மகனையும் அழைத்துக்கொண்டு ஆட்டோவில் பயணித்து , ஏழை மக்களுடன் சகஜமாக பழகியது பலராலும் பாராட்டப்பட்டு வருகின்றது.


Advertisement

Advertisement