தமிழ் சினிமாவில் துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் இயக்குநரும் நடிகருமான செல்வராகவன். இந்தப் படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து நடிகர் தனுஷை வைத்து காதல் கொண்டேன் படத்தை எடுத்தார். அந்த படமும் வேற லெவலில் ஹிட் அடித்தது.
இதைத்தொடர்ந்து 7ஜி ரெயின்போ காலனி, ஆயிரத்தில் ஒருவன், புதுப்பேட்டை போன்ற படங்களும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. ஆனாலும் அவர் இயக்கிய மயக்கம் என்ன, இரண்டாம் உலகம் போன்ற படங்கள் பாக்ஸ் ஆபிஸில் தோல்வியை பெற்றன. சூர்யாவை வைத்து இயக்கிய என்.ஜி.கே படமும் பெரிதளவில் வெற்றி பெறவில்லை.
இன்னொரு பக்கம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி வாழ்க்கை தத்துவங்களையும் பகிர்ந்து வருகின்றார் செல்வராகவன்.
இந்த நிலையில், தற்போது நமது வாழ்க்கை நமது கையில் மட்டும்தான் என்று அட்வைஸ் பண்ணி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் செல்வராகவன்.
அதன்படி அவர் கூறுகையில், நமது வாழ்க்கையில் 95 சதவீதமானவர்கள் மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்று நினைத்துதான் வாழ்ந்து வருகின்றார்கள். நாளைக்கு நமது தட்டில் சோறு இல்லை என்றால் அவர்களா வந்து வைக்கப் போகின்றார்கள்? அவர்கள் நம்மைப் பற்றி நல்லவிதமாக பேசினாலும் வானத்திலிருந்து தேவதைகள் குதித்து வரப்போகின்றார்களா? இல்லை தப்பா சொன்னால் வட சட்டில போட்டு வறுக்கப் போகின்றார்களா? கிடையவே கிடையாது. நமது வாழ்க்கை நமது கையில் மட்டும்தான்.
இந்த விஷயம் பொண்டாட்டில ஆரம்பிச்சு ரிலேட்டிவ் போயி அதுல ஒன்னுவிட்ட ஒன்னுவிட்ட என்று தொடர்வதோடு, தெருவில என்ன நினைப்பாங்க என்றும் போயிட்டே இருக்கும். நாம ரியாக்ட் பண்ணினா தான் அவங்க பேசுவாங்க. இல்லனா அவங்க பேசாம போயிட்டே இருப்பாங்க. நம் வாழ்க்கை நமது கையில் மட்டும் நமது மனசாட்சிக்கு மட்டும் தான் என்று பேசியுள்ளார்.
Listen News!