• Sep 06 2025

பெங்களூரில் Chill பண்ணும் சூப்பர் ஸ்டார்... என்ன சம்பவம் தெரியுமா?

Aathira / 3 weeks ago

Advertisement

Listen News!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இன்றைய தினம் கூலி திரைப்படம் வெளியாகியுள்ளது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள நிலையில் கூலி படம் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் காணப்படுகின்றது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரைத்துறையில் 50 வருடங்களை நிறைவு செய்துள்ளார். தற்போது அவருக்கு பல பிரபலங்களும் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.  அதேபோல் கூலி திரைப்படம் வெற்றி பெற வேண்டும் என்றும் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.


இந்த நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திடீரென்று பெங்களூருக்கு சென்றுள்ளார். அவர் அதில் வெள்ளை நிற குர்தா, வேட்டி அணிந்து மிக எளிமையாக காணப்பட்டுள்ளார். தற்போது குறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தள பக்கங்களில் வைரலாகி வருகின்றன.


அதன்படி பெங்களூரில் உள்ள பசவனக்குடியில் அமைந்துள்ள ராமகிருஷ்ணா ஆச்சிரமத்திற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சென்று உள்ளாராம். அவரை ஆச்சிரம நிர்வாகிகள் வரவேற்றுள்ளதோடு அங்குள்ள மடத்தில் சாமி தரிசனமும் செய்துள்ளார் ரஜினிகாந்த். அங்கு சிறிது நேரம் தியானமும் செய்துள்ளாராம்.

குறித்த ஆச்சிரமத்திற்கு ரஜினிகாந்த் வந்துள்ள செய்தியை அறிந்த குழந்தைகள், இளைஞர்கள் என பல்வேறு தரப்பினரும் அங்கு அவரை சந்தித்து புகைப்படம் எடுத்து மகிழ்ந்துள்ளனர். தற்போது ரஜினிகாந்த் பெங்களூரில் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement