• Aug 14 2025

கிரிஷை சுற்றி நிகழும் அதிரடித் திருப்பங்கள்! ரோகிணியின் முடிவால் ஷாக்கில் மீனா-முத்து..!

subiththira / 1 hour ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று, கிரிஷ் ரோகிணியை பார்த்து நான் உங்க கூடவே இருக்கன் எங்கயும் போகமாட்டேன் என்று சொல்லுறார். அதைப் பார்த்த மனோஜ் ரோகிணி இங்க என்ன நடக்குது என்று கேட்கிறார். இதைப் பார்த்த விஜயா அண்ணாமலை கிட்ட பாத்தீங்களா இவன் இப்பவே உரிமை கொண்டாட வெளிக்கிட்டான் என்று சொல்லுறார். பின் ஸ்ருதி மனோஜை பார்த்து கிரிஷை தேடி யாராவது வந்தால் அவங்க கூட இவன அனுப்பலாம் தனியா எல்லாம் அனுப்ப முடியாது என்று சொல்லுறார்.


அதனை அடுத்து முத்து கிரிஷோட பாட்டியை பற்றி ரோட்டில இருக்கிற எல்லாருகிட்டயும் விசாரிச்சுக் கொண்டிருக்கிறார். பின் அங்கிருந்த ஆட்டோ ட்ரைவர் ஒராள் இந்த அம்மா என்ட ஆட்டோல தான் வந்தாங்க என்று சொல்லுறார். அதைக் கேட்ட முத்து எங்க போனாங்கன்னு தெரியுமா என்று கேட்கிறார். அதுக்கு ஆட்டோ ட்ரைவர் கோவிலுக்குப் போனாங்க என்று சொல்லுறார். அதைக் கேட்ட உடனே முத்து மீனாவுக்கு போன் எடுத்துச் சொல்லி கோவிலில போய் பார்க்கச் சொல்லுறார்.


இதனை அடுத்து அண்ணாமலை கிரிஷை school-க்கு கூட்டிக் கொண்டு போறார். அங்க கிரிஷ் ஒரு அம்மாவப் பார்த்தவுடனே பாட்டி என்று சொல்லிக் கொண்டு ஓடிப் போறார். அதைப் பார்த்த அண்ணாமலை முத்து பாட்டியை கூட்டிக் கொண்டு வந்திடுவான் நீ கவலைப்படாத என்று சொல்லுறார். பின் ரோகிணி கிரிஷை school மாத்தப் போறேன் என்று principal கிட்ட சொல்லுறார். 


பின் ரோகிணி கிரிஷை அந்த school-ல இருந்து வேற school-க்கு கூட்டிட்டு போறதை பார்த்த ரோகிணி அம்மா ரொம்பவே கவலைப்படுறார். இதனை அடுத்து மீனா கிரிஷோட பாட்டியை பற்றி கோவிலில விசாரிக்கிறார். பின் ரோகிணி கிரிஷை கூட்டிக்கொண்டு வித்தியா வீட்ட போறார். ரோகிணி அங்க போய் ஒரு வாரத்துக்கு கிரிஷ் உன்கூடவே  இருக்கட்டும் என்று வித்தியாவப் பார்த்துச் சொல்லுறார். அதுக்கு வித்தியாவும் சம்மதிக்கிறார். இதுதான் இன்றைய எபிசொட். 

Advertisement

Advertisement