• Jan 18 2025

இவங்க தான் அஜித்துக்கு மாமியாரா? அஜித்தின் மகளை போலவே இருக்காங்களே..!

Aathira / 9 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக காணப்படும் அஜித், நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு அனௌஷ்கா மற்றும் ஆத்விக் என்ற பிள்ளைகளும்  இருக்கின்றார்கள்.

அமர்க்களம் என்ற படத்தில் மூலம் நடிகர் அஜித்துக்கும் ஷாலினிக்கும் காதல் மலர்ந்தது. அதன் பின்பு அவர்கள் வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்கள். தற்போது வரையில் ஹாலிவுட்டின் ஃபேவரிட் ஜோடியாக இருவரும் வலம் வருகிறார்கள்.

அமர்க்களம் படத்தில் கத்தியை வைத்து ஷாலினியை அஜித் மிரட்டுவது போல ஒரு காட்சி வரும். அந்த காட்சியில் நடிக்கும் போது உண்மையாகவே அவருக்கு கையில் கத்திகழித்து விட்டதாம். இதனால் பதறிப் போன அஜித் உடனே அவருக்கு முதலுதவி செய்ததாக கூறப்படுகிறது.


அதை தொடர்ந்து இன்னும் ஒரு முறை சரண், ஷாலினி , அஜித் ஆகிய மூன்று பேரும் அமர்ந்திருக்க,  சீக்கிரம் ஷூட்டிங்க முடிங்க  சரண், இல்லனா நான் ஷாலினி லவ் பண்ணிடுவேன் என அப்பவே ஓப்பனாக சொல்லி உள்ளாராம் அஜித்.

அதன் பின்பு ஒரு கட்டத்தில் ஷூட்டிங்கில் வைத்தே தனது காதலை ஷாலினியிடம் சொல்லிவிட்டாராம். ஆனாலும் ஷாலினிக்கும் ஆசை இருந்தாலும் அதை வெளிக் காட்டாமல் அவருடைய அப்பாவிடம் போய் சொல்லி உள்ளார். இதை அடுத்து இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது.


இந்த நிலையில், நடிகை ஷாலினியின் உடன்பிறப்புகளை எல்லாருக்கும் தெரியும். ஆனால் அவரின் அம்மாவை பலரும் பார்த்ததில்லை. தற்போது ஷாலினியின் அம்மாவின் புகைப்படம் வெளியாகி வைரலாகி உள்ளது.

அதாவது அஜித்தின் மாமியார் ஆன ஆலிஸின் பிறந்தநாள் அண்மையில் கொண்டாடப்பட்டது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தான் தற்போது ட்ரெண்டாகியுள்ளது.

இதேவேளை தற்போது நடிகர் அஜித் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இதை அடுத்த குட்பேட்அக்லி படத்தில் நடிப்பதற்கு கமிட்டாகி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement