• Dec 05 2023

பிக்பாஸ் சீசன் 7 பார்க்கும் குழந்தைகளுக்கு மனநலம் பாதிக்கப்பட வாய்ப்புண்டு? அதிர்ச்சித் தகவல்

Aathira / 3 weeks ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் சீசன் 7 தொடங்கியதிலிருந்தே சர்ச்சைகளுக்கும் விமர்சனங்களுக்கும் பஞ்சமில்லாமல் ஒளிபரப்பாகி வருகின்றது . இந்த சீசனில் மட்டும் தான் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான அடல்ட் கண்டெண்ட், பாலியல் சீண்டல்கள் - அத்துமீறல் புகார்கள், உருவ கேலி உள்ளிட்டவை தொடர்ந்து வருகின்றது.

அதுமட்டுமின்றி, இதுவரை நடைபெற்ற எந்த சீசனிலும் நிகழாத சம்பவமான  அதாவது, பெண்களின் பாதுகாப்புக்கு பிரதீப் ஆண்டனி அச்சுறுத்தலாக இருப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில் 'ரெட் கார்டு' கொடுக்கப்பட்டு அவர் வெளியேற்றப்பட்டது காணப்படுகின்றது.

இதற்போது, ஒரு வாரங்களை கடந்தும் அது தொடர்பான விவாதங்கள் நிகழ்ச்சிக்கு உள்ளேயும் வெளியேயும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.  


இந்த நிலையில், தற்போதைய பிக் பாஸ் நிகழ்ச்சியை குழந்தைகள் பார்த்தால் அவர்களின் குழந்தைமையே போய்விடும் என குழந்தைகள் நல ஆர்வலர் ஒருவர் பேட்டி அளித்துள்ளார்.

அதன்படி அவர் மேலும் கூறுகையில், 'குடும்பச் சூழல், சமூக சூழல் இரண்டிலும் இருந்துதான் குழந்தைகள் பலவற்றைக் கற்றுக்கொள்கின்றனர். இதில் ஊடக வெளி என்பது சமூக சூழல். எது சரி, எது தவறு எனத் தெரியாத பருவத்தில் குழந்தைகள் இருக்கின்றனர்.

இப்போது குழந்தைகள் பெரும்பாலும் ஊடகங்களை சார்ந்தவர்களைத்தான் தங்கள் முன்மாதிரியாகக் கருதுகின்றனர். அதில் ஒரு கவர்ச்சி இருக்கிறது.


'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் நகைச்சுவை என்ற பெயரில் மற்றவர்களை உருவகேலி செய்தல், இழிவுபடுத்துதல் அதிகமாகி வருகிறது. ஆணாதிக்க சிந்தனையின் எச்சங்களும் நிகழ்ச்சியில் பரவியுள்ளன.

வீட்டுக்குள்ளேயே தினமும் இந்த நிகழ்ச்சியை குழந்தைகள் பார்க்கும்போது, அவர்களின் மனநலம் பாதிக்கப்படுகிறது. இது குழந்தைகளிடையே வன்மத்தை வளர்த்தெடுப்பதற்கான வாய்ப்பை அதிகரிக்கும் 'எனத் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement