• Jan 10 2025

சத்யா எனக்கு அண்ணா, ஜெப்ரி என்னோட தம்பி! சும்மா பேசுறத ட்ரெண்ட் ஆகிட்டாங்க- அன்ஷிதா

subiththira / 10 hours ago

Advertisement

Listen News!

விஜய் டிவி பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட செல்லமா சீரியல் நடிகை அன்ஷிதா பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின்னர் தற்போது விஜய் டிவி இன்ஸ்ராகிராம் லைவில் பேசியுள்ளார். 


அன்ஷிதா பிக்பாஸ் வீட்டில் 10 போட்டியாளர்களின் ஒருவராக இறுதி வரையில் இருந்தார். கடந்த வாரங்களில் நடந்த டபுள் எலிமினேஷனில் வெளியேறி விட்டார். தற்போது பிக்பாஸ் அனுபவங்கள் குறித்தும் போட்டியாளர்கள் குறித்தும் வெளிப்படையாக பேசியுள்ளார். அவரை கூறுகையில் " வெளிய வந்த பிறகு ரொம்ப ஹாப்பியா இருக்கேன்.


மக்கள் ரொம்ப சப்போட் கொடுத்து இருக்காங்க. அதேதான் விஜய் சேதுபதி சார் கிட்டையும் சொன்னே வெளியே நிறைய அன்பை சம்பாதிக்கணும் என்று அதேதான் நடந்து இருக்கு நான் ரொம்ப ஹாப்பியா இருக்கேன்" என்று கூறினார்.  மேலும் " வெளிய வந்த உடனே அம்மாக்கு கால் பண்ணிக்கதைச்சேன். பிக்பாஸ் வீட்டுல சத்தியாக்கும் எனக்கும் நல்ல பாண்டிங் இருக்கு போக போகத்தான் புரிஞ்சிக்கிட்டேன். அண்ணா தங்கச்சின்னு எப்போவும்  நல்ல பாசமா இருக்கோம்.


வெளிய வந்த பிறகு அவங்களை போய் பார்த்து டைம்ஸ்பென்ட் பண்ணுனேன். ஜெப்ரி என்னோட அழகு தம்பி. இப்போ கூட என்னையும் உள்ள விடுங்கன்னு கதறிட்டு இருக்கேன் விடுவாங்கனு நம்புறேன். "எனக்கு இஸ்ட்டம் இல்ல" என்ற வார்த்தை ரொம்ப பிரபலமாகிட்டு அதை வச்சி பாட்டே எடுத்துட்டாங்க. நான் சண்டை போடும் போது வாயில் வந்ததுதான் அப்டியே ட்ரெண்டாகிட்டு. பிக்பாஸ் போனதுல நிறைய அன்பை சம்பாரிச்சி இருக்கேன் அதுவே போதும் ஹாப்பி என்று கூறியுள்ளார்.

Advertisement

Advertisement