• Apr 27 2024

சினிமாவில் 10 ஆண்டுகளை நிறைவு செய்த அனிரூத்- இசை நிகழ்ச்சி மூலம் ட்ரீட் கொடுக்க முடிவு செய்துள்ளாராம்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தனுஷ் நடிப்பில் வெளியாகிய '3' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான அனிரூத், இந்தப் படத்தில் இடம்பெற்ற வை திஸ் கொலைவெறி பாடல் பட்டி தொட்டி எல்லாம் பிரபல்யமானது.இதனைத் தொடர்ந்து பல படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

இறுதியாக பீஸ்ட் விக்ரம் ஆகிய திரைப்படங்களுக்கு இசையமைத்திருக்கின்றார்.தனுஷின் நடிப்பில் உருவாகியுள்ள திருச்சிற்றம்பலம் திரைப்படத்திலும் இசையமைத்துள்ளார்.இது தவிர தல அஜித் நடிக்கவிருக்கும் ஏ.கே 62 படத்திலும் ரஜினியின் 169 படத்திலும் கமிட்டாகியுள்ளார்.

இந்நிலையில், சினிமாவில் 10 ஆண்டுகளை நிறைவு செய்துவிட்ட அனிரூத், அவரது ரசிகர்களுக்கு இசை நிகழ்ச்சி மூலம் ட்ரீட் கொடுக்க முடிவு செய்துள்ளாராம். இந்த இசை நிகழ்ச்சிகள் சென்னையிலும் கோவையில் நடக்கவுள்ளது.செப்டம்பரில் சென்னையிலும், அக்டோபரில் கோவையிலும் இசை நிகழ்ச்சி நடக்கும் என, அனிருத் தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்ச்சிக்கு "Once Upon a Time Tour" என 'விக்ரம்' பட ஸ்டைலில் டைட்டில் வைத்துள்ளார். முக்கியமாக அனிருத்தின் இசை நிகழ்ச்சியை, விஜய் தொலைக்காட்சியும், ஹாட்ஸ்டாரும் இணைந்து தயாரிக்கவுள்ளதும் உறுதியாகியுள்ளது. இதனால், அனிருத் ரசிகர்கள் பயங்கரமான உற்சாகத்தில் உள்ளனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement