• Apr 25 2024

ஏ.கே 61 திரைப்பட ஷுட்டிங்கில் திடீரென செய்யப்பட்ட மாற்றம்- புனேயில் நிறுத்தப்பட்ட படப்பிடிப்பு

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முக்கிய நடிகரான அஜித்தின் 61வது படப்பிடிப்பு சமீபத்தில் ஐதராபாத்தில் சிறிய பூஜையுடன் ஆரம்பமாகியது.இப்படத்தின் முதற்கட்டப்படப்பிடிப்பானது ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் சென்னை அண்ணா சாலை போன்ற செட் போடப்பட்டு நடத்தப்பட்டது.

இப்படத்தை இயக்கநர் எச்.வினோத் இயக்கி வருவதோடு போனிகபூர் இதனை தயாரித்து வருகின்றார்.வங்கிக் கொள்ளை சம்மந்தப்பட்ட படம் என சொல்லப்படுகிறது. இதனால் வங்கி மாதிரி போடப்பட்ட செட்டில்தான் H வினோத் படப்பிடிப்பை நடத்தி வருகிறாராம்.

இந்த படத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி ஆகியோர் நடிப்பதை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளனர்.இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத் மற்றும் பூனே ஆகிய பகுதிகளில் நடந்து வந்த நிலையில் இப்போது சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்த படப்பிடிப்பில் அஜித் கலந்துகொள்வார் என சொல்லப்படுகிறது. இதையடுத்து மீண்டும் புனேவில் நடக்கும் படப்பிடிப்போடு மொத்த படமும் நிறைவடையும் என தகவல் வெளியாகியுள்ளது.இதனால் அஜித் ரசிகர்கள் மிகவும் குஷியடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement